ஆறாம் பாடல்
----------
வையை
பொருட் சுருக்கம்
1 - 10: முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொணர்ந்து ஊழி
முடிவின்கண் நிலத்தை முழுகுவிக்கப் பெய்யுமாறு போலப் பெய்தனவாக;
அதனால் மலையிலுள்ள மான்கள் கலங்கவும் மயில்கள் அகவவும்
மலையின் மாசு கழியவும் அருவி விரைந்து இழிந்தது; அவ் வருவிநீர்
நாட்டின்கண் எங்கும் பரந்து உழவு முதலிய தொழில் பெருகும்படி
ஓடியது;
11 - 24: வையையாற்றின்கண் வெள்ளம் பெருகிற்று.
அப் புதுப்புனலின்கண் ஆட விரும்பிய மகளிர், அதில் தீ பூ
ஆராதனைப் பொருள்கள் பொன்மீன் முதலியவற்றை ஏந்தினர்.
தத்தம் கணவன்மாரையும் அவ் விழவிற்குரிய கோலங்கோடச்
செய்தனர். இங்ஙனமாக மகளிரும் மைந்தரும் நீர்விழவிற்கு
நெருங்கினர். கொடி அழுந்தவும், வளை அலையவும், தொய்யில்
அழியவும், மேகலைகள் அற்று உதிர்ந்து நூல் தோன்றவும்,
முத்துவடம் சந்தனச்சேற்றால் நிறம் மழுங்கவும், அலத்தகம்
அழியவும், குங்குமக்குழம்பு வண்டலிடவும், பூசின சந்தனஞ்
சிதையவும், இருபாலாருடைய அணிகலன்களும் தம்முள் மயங்கவும்
செய்து, அவர்களுடைய நிறையை இவ் வையை உடைத்தது; அதைப்
போவே அணைகளையும் உடைத்தது; அதன் அலைகள் கரையை
உடைத்தன; அவ் வுடைப்பினை அடைத்தற்குப் பறை அறையப்பட்டது;
அவ் வொலிகேட்டலும் மதுரை மாநகரமே கிளர்ந்து எழுந்தது;
25 - 35: அங்ஙனம் கிளர்ந்த அன்று, வையையின்கண்
நீராடப்
பிடியானைகள் அணியணியாய்ச் சென்றன; மகளிரும் மைந்தரும்
நீராடற்கேற்ற ஆடைகளை அணிந்து யானைகளின் மேலும் குதிரைகளின்
மேலும் ஊர்ந்து புறப்பட்டனர்; அவர்கள் நீர்விளையாட்டாகிய போரைச்
செய்தற்குரிய படைகளையும் கொண்டுசென்றனர்; புழுகுநிரப்பிய
துருத்தியும், பனிநீர் நிரப்பிய கொம்பும் மிதவைகளும் நெட்டியாற் செய்த
தேரும் கொண்டு நெருங்கிச் சென்றனர்; |
|
|
|