36 - 51: நெருக்க மிகுதியால் இளைஞரும் இயங்க
மாட்டாதவராயினர்; மெலியோர் துறைகளை நாடிச்சென்றனர்.
வலியோர் புதுப்புனலின்கட் பாய்ந்து ஆடினர்; அதனால் வையை
சாறும் சேறும் மலரும் மணக்கச்சென்றது. மணங்கமழ்ந்து செல்லும்
அந்நீர் தூய்மை யிழந்தது எனக் கருதி அந்தணர் அதன்கண்
ஆடலை ஒழிந்தனர்; சூடிக் கழித்த மலரும் தாரும் கோதையும்
மரங்கொடிகள் முதலியவற்றின் வேரும் தூரும் காய்களும் கிழங்கும்
கீழ்மக்கள் உண்டு உகுத்த கள்ளும் கலத்தலால் நலனழிந்து
வேறாயிற்றென்று பிறரும் நீங்கினர்; சேறாகிய வையை நீர்ஓட்டம்
இங்ஙனமாயிற்று;
52 - 60: முருகன் பரங்குன்றத்தின்கண்ணே அருவி
தாலாட்டவும், காற்றுப் பாராட்டவும், தலைவர் மகளிரோடு இனிதே
துயில்கின்றனர் என்ற செய்தியை மதுரையிலுள்ளார்க்குச் சென்று
அறிவிப்பதுபோலத் தமிழ்வையைப் புனல் பரவிச் சென்றது;
61 - 67: இவ்வாறு பரந்த வையைப் புனலிலே ஒரு தலைவன்
இற்பரத்தையோடே நீராடினான்: அதுகண்ட காதற் பரத்தை ஊடினாள்;
அவள் ஊடலைத் தணித்தற்கு அத்தலைவன் தளிரைக் கையுறையாகக்
கொணர்ந்து காட்டி வையை நீரின் பெருக்கத்தை அவட்குக் கூறினான்.
அவள் பின்னரும் அவனோடு ஊடுவாளாய்க் கூறுகின்றாள்:-
நீ இத் தளிர் எனக்குக் கொய்தாயல்லை; நின்னைப்
புதிதாக
விரும்புமகளிர்க்குக் கொய்தாய் என்றாள். அதுகேட்ட தலைவன் நீ
அறிந்தில்லை; இது நின்பொருட்டே கொய்து கொணரப்பட்டது என்றான்.
மேலும் காதற்பரத்தை கூறுகின்றாள்:-
முன்பெல்லாம் நீ எனக்குக் கொய்து கொணர்ந்த தளிர்
விரைந்து
நேரே என்பால் கொணர்ந்தபடியால் துவளாதிருந்தன. இது
மற்றொருத்திக்குக் கொய்யப்பட்டு அவள் மறுத்தபின்னர் இங்கே
கொணர்ந்தபடியால் பெரிதும் துவண்டது பார்; அவளுக்காகவே இதை நீ
கொய்தாய்; பின்னர் அவளுக்குக் கொடுத்தாய்; அவள் மறுத்துவிட்டாள்;
நினது வணக்கத்தையும் அவள் பொருட்டாகக் கொள்ளவில்லை போலும்!
நான் கூறுவது உண்மையே அன்றோ கூறுக;
68 - 74: இதுகேட்ட, தலைமகன் வையையின்கண் புணையேறி
வரவேண்டியிருந்தமையாலே பொழுது தாழ்த்தது: அதனால் இத் தளிர்கள்
துவண்டன; "திருப்பரங்குன்றத்து ஆணை; வையைநீரின் அழகிய
பெருக்கன்றோ" என்றான். வையைப் |
|
|
|