பக்கம் எண் :

பரிபாடல்- வையை92

மாம். கெல்மரம் - நீரியக்கியவழிச் செல்லும் மரம் என்க. 'நீர் வழிப்படும்
புணைபோல்' என்றார் பிறரும். வவ்வு - வவ்வுதற்றொழில். புணை -
தெப்பம். என்னும் - சிறிதும். பனியாய் - அஞ்சாதாய்.

      அம் மகளிர் துன்பத்தை மாற்ற நீ அவரொடு தங்கினை எனினும்
நீஈண்டு வருதலானே அவர் கண் பனிவார்ந்து வெதும்பும், அங்ஙனம்
வெதும்பச் செய்து எம்பால் வருதலைப் பரிகரிப்பாயாக என்க. கனற்றுபு
- கனற்றி; வெதுப்பி. வரவு காத்தி என்றது, வருதலைப் பரிகரி என்றவாறு,
சினம் காக்க என்புழிப்போல. அதுகேட்ட தலைவன் மேலே
கூறுகின்றான்.

      (பரிமே.) மேல் தலைமகன்.

87 - 91: நல்லாள் . . . . . . . . . . .யாதென

      (இ-ள்.) நான் குளித்த பைந்தடத்து - ஏடி நான் ஒரு பசிய
குளத்தின்கண் நீராடினேனாக, நல்லாள் கரைநிற்ப - அக் குளத்தின்
கரையிலே ஒருத்தி நிற்ப, நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து -
அங்ஙனம் நின்றவள் தன் அறியாமையாலே கரைக்கண் நில்லாதவளாய்
அக் குளத்திற்பாய்ந்து ஆழ்ந்த இடத்தில் அழுந்தி அலையினாலே
மூழ்கடிக்கப்பட்டுப் பின்னர் அவ்விடத்தினின்றும் நீங்கி எழுந்து, அல்லா
என்மேல் விழுந்தாளை - மயங்கி என்மேல் விழுந்தாள் அங்ஙனம்
விழுந்தவளை, யான் எழுந்து எய்தி ஏற்றுக்கொள்ளா அளவை-குளித்துக்
கொண்டிருந்த யான் எழுந்து அவளை அணுகி ஏற்றுக் கொள்ளுமுன்பே,
எழும் தேற்றாள் - தானே எழுந்தாள். அதனால் அவள் காம
நுகர்ச்சியறியாத இளமையுடையாள் என்பதுணர்க. கோதையின் உள்
அழுத்தியாள் எவளோ - அவளை யன்றி மாலை போல என்
மார்பினுள்ளே அழுந்த முயங்கியவள் யாவளோ! தோய்ந்தது யாது என
- அவளோடு யான் ஆடிய யாறு தான் யாது கூறுக என்று கூறாநிற்ப
(மேலே காதற் பரத்தை கூறுகின்றாள்);

      (வி-ம்.) நல்லாள் என்றது, ஒருத்தி என்னும் பொருட்டாய் நின்றது
யாரோ ஒருத்தி என்றவாறு. யான் வையையாற்றின்கண் நீராடவும் இல்லை
என்பான், நான் குளித்த பைந்தடத்து என்றான். பைந்தடம் - பசிய
குளம். தானே நீங்கி எழுந்து என்க. அல்லாந்து எனற்பாலது ஈறுகெட்டு
அல்லா என நின்றது. அல்லாந்து அலமந்து சுழன்று, மயங்கி என்றபடி.
"ஆக்கமிழந்தேம் என்று அல்லாவார்" (குறள் - 593) "அலமரல்
தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" (உரி - 13) என்பது தொல்காப்பியம்.

      யான் எழுந்து ஏற்றுக்கொள்ள அளவை என மாறுக. எழுந்தாள்
எனற்பாலது எழும் என எதிர்காலச் சொல்லாய் மயங்கிற்று. கோதையின்
மாலைபோல. கோதையின் உள் அழுத்தியாள் எவளோ, என்றதற்குக்
கோதை என்பதனை முன்னிலைப் பெயராகக் கொண்டு