பக்கம் எண் :

பரிபாடல்- வையை93

'கோதைபோன்ற நின்னைப்போன்று என் மார்பினகத்து முயங்கப்பட்டவள்
பிறள் யாவளோ' எனினுமாம். என்னால் நீ தழுவப்படுமாறு
'தழுவப்பட்டாள் பிறள் எவளோ' என்றவாறு. யாறு - எந்த யாறு.

      (பரிமே.) 87. அவள் பேதைமையால் கரையில் நில்லாது.

      90. (தேற்றாள்) காமநுகர்ச்சி அறியும் பருவத்தள் அல்லள்.
(அறிபவளாயின் யான் ஏற்றுக்கொள்ளும்படி வாளா கிடப்பள் என்பது
கருத்து.)

92 - 93: தேறி . . . . . . .. .. . .யாறு

      (இ-ள்.) தேறித் தெரிய உணர் நீ - அதனை யான் கூறுவேன்
கூறிய பின்னர் நீயே தெளிந்து நன்கு உணர்ந்து கொள், பிறிதும் ஓர்
யாறு உண்டோ - அங்ஙனம் நீ அவரோடு ஆடுதற்கு ஏற்ற யாறு
மற்றொன்றும் உண்டோ?, இவ் வையை யாறு - நீ ஆடியது இந்த
வையை யாறேதான்:

      (வி-ம்.) யான் கூறுவதனால் தேறிப் பின்னும் நன்கு உணர் என்க.
அறியாதாய்போலக் கூறுவாய் என்பாள் பிறிதுமோர் யாறுண்டோ என
வினவினாள்.

      வையையைப் பற்றியே உரையாடல் நிகழ்வது பற்றி இவ் வையை
என அண்மைச் சுட்டாற் சுட்டினாள்.

94 - 95: இவ்வையை , . . . . . . . . . . . குன்று

      (இ - ள்.) இவ் வையை யாறு என்ற மாறு என்னை - அது கேட்ட
தலைவன் யான் குளத்திற் குளத்தேனாகவும் நீ இவ்
வையையாற்றிலேதான் ஆடினை என்று கூறிய மாறுபாடுதான்
என்கொலோ, கையால் தண்பரங்குன்று தலைதொட்டேன் - பின்னும் நீ
ஐயுறுவாய் என்னின் முன்புபோலன்றிக் குளிர்ந்த திருப்பரங்குன்றின்
தலையை என் கையாலே தொட்டுக் கூறுகின்றேன் (என்றான்);

      (வி - ம்.) இங்ஙனமாக நிகழ்ந்தனவற்றையெல்லாம் அறிந்த
தலைமகள் மேல் நிகழ்ந்த இருவர் கூற்றையும் கொண்டு கூறி மேலுங்
கூறுகின்றாள்.

      (பரிமே.) என்று பின்னும் சூளுற்றான் என்று இவ் விருவர்
கூற்றையும் கொண்டு (தலைவி) கூறினாள்.

      காதற்பரத்தையை அவள் இல்லின் முதுபெண்டிர் கழறியவாறும்,
வாயில்கள் ஊடல் உணர்த்தியவாறும் அவளைத் தலைமகன்
புணர்ந்தவாறும் விறலிக்குத் தலைமகள் கூறுகின்றாள்.

      (தலைவனால் ஊடல் தீர்க்கும்படி விடுக்கப்பட்ட விறலிக்குத்
தலைமகனுக்கும் காதற்பரத்தைக்கும் நிகழ்ந்த உரையாடலை
எல்லாம் அறிந்த