என்றது, விறலியை விளித்தவாறு.
காமங்கொடிவிட என்றதற்கு அதற்கு
இன்பமுண்டாக என்பர் பரிமேலழகர்.
(பரிமே.) 98: அதற்குக் காரணமாகிய மகள் இவன்
சொல்லிய பேதைப் பருவத்தாள்.
99. அல்லாப்பை
இறுகப்பூட்டுதலால்.
103. மதுவாற்
களிப்பார்கள்.
104. 'துனிப்ப' எனப் பன்மையாற் கூறிற்று உணர்ப்பு
வயின் வாரா
வூடலை நோக்கி. (உணர்ப்பு வயின் வாராவூடல் தோன்றின்
புலத்தல்தானே கிழவற்கும் வரையார் என்பவாகளின் ஈண்டு இருவரும்
ஊடிக்கொள்வர் என்பதுபடப் பன்மையாற் கூறினள் என்பது கருத்து.)
இதுகாறும் விறலிக்குக் கூறிய தலைவி இனி வையைக்குக்
கூறுவாளாய் அவ் விறலி கேட்பக் கூறுகின்றாள்.
105 - 106: கூடுவார் . . . . . . . . . நினக்கு
(இ-ள்.) வையை - வையையாறே, ஆடுவார் நெஞ்சத்து
அலர்ந்து
அமைந்த காமம் - நின்னிடத்தே நீராடுவாரின் நெஞ்சின்கண்ணே
பெருகிப் பொருந்திய இத்தகைய காமத்தை உண்டாக்கும் தன்மை,
நினக்கு வாடற்க - உன்பால் என்றென்றும் குறையாதாகுக.
(வி - ம்.) இவ்வாறு வையையை வாழ்த்துவாள்போலத் தனது
நெஞ்சினிடத்தே உள்ள ஊடன் மிகுதியை விறலிக்குக் காட்டித்
தலைவனுடைய பரத்தமையை நன்கு அவட்குணர்த்தி வாயின் மறுத்த
வாறாதல் உணர்க.
என்பது . . . . . . . . . . வாயின் மறுத்தது.
(இ - ள்.) இப் பாடல் வையையாற்றின்கண் புதுப்புனல்
வந்துழித்
தலைவன் இற்பரத்தையுடன் நீராடினான் என்பதனைக் காதற்பரத்தை
கேட்டுத் தனக்குத் தழை கொணர்ந்த அத் தலைவனைப் புலந்தாள்;
அவளை வாயில்களாவார் ஊடலுணர்த்த அவளைக் கூடினான் தலைவன்.
இச்செய்தி அனைத்தையும் தலைவி அறிந்து ஊடியிருந்தாள்; அவள்
ஊடல்தீர்க்கும் பொருட்டுத் தலைவன் விறலியைத் தூது விட்டான்.
அவ் விறலிக்குத் தலைவி தான் அறிந்தன வெல்லாங் கூறித் தலைவன்
பரத்தமையைப் புலப்படுத்தி வையையை வாழ்த்துமாற்றால் தனது
ஊடன்மிகுதியை விளக்கி, வாயில் மறுத்தபடியாம். |