60-76: அந் நீரின்கண் ஆடிய தலைவி தன்மெய்யின் குளிர்
நீங்கும் பொருட்டு வெப்பமுடைய கள்ளை ஏந்தினாள்; அப்பொழுது
அவள் கண்கள் கறுத்திருந்தன; அக் கள்ளைப் பருகிய பின்னர்ச்
சிவந்தன; சிவந்த அக் கண்ணின் எழில் கண்ட தலைவன் அவற்றைப்
பாராட்டிப் பாடினான்; அத் தலைவனோடு அளவளாவக் கருதி
மற்றொருத்தி துன்பமுற்றாள்; அவள் கருத்தை அறிந்த தலைவன்
இதனைத் தலைவி அறியின் என்னாமோ என்று நடுங்கித்
தலைவியின்பாற் சென்றான்; இந் நிகழ்ச்சியை அறிந்த தலைவி தான்
அணிந்திருந்த மாலையை அறுத்தெறிந்து மேலும் ஊடினாள்; அவள்
கண்கள் பின்னும் சிவந்தன; அதுகண்ட தலைவன் அவளடிகளில்
வீழ்ந்து வணங்கினான்; அதனானும் தலைவி ஊடல் தீராது அவன்
தலையில் உதைத்து மேலும் சினந்தாள்.
77-86: அப்பொழுது வையையின்கண் யாழும் மிடற்றுப்பாடலும்
இயைந்து ஒலித்தன; குழல்கள் ஒலித்தன; முழவு முழங்கின;
தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடாநின்றனர். இம் முழக்கத்தோடு
நீரோட்டத்தா லுண்டாய முழக்கமும் சேர்ந்து இடியோடு சேர்ந்த முகில்
முழக்கத்தை ஒத்திருந்தன; வையையே! யாம் இன்று நின்பால் ஆடி
இன்புற்றாற்போல என்றும் இன்புற்று நின்னைப் பாராட்டி மகிழ்வேமாக.
திரையிரும் பனிப்பௌவம் செவ்விதா வறமுகந்
துரவுரு முடன்றார்ப்ப ஊர்பொறை கொள்ளாது
கரையுடை குளமெனக் கழன்றுவான் வயிறழிபு
வரைவரை தொடுத்த வயங்குவெள் ளருவி
5 இரவிருள் பகலாக இடமரிது செலவென்னாது
வலனிரங்கு முரசிற் றென்னவ ருள்ளிய
நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன
பெயலாற் பொலிந்து பெரும்புனல் பலநந்த
நலனந்த நாடணி நந்தப் புலனந்த
10 வந்தன்று வையைப் புனல்
நளியிருஞ் சோலை நரந்தந் தாஅய்
ஒளிர்சினை வேங்கை விரிந்தவிண ருதிரலொடு
துளியி னுழந்த தோய்வருஞ் சிமைதொறும்
வளிவாங்கு சினைய மாமரம் வேர்கீண்டு,
15 உயர்ந்துழி யுள்ளன பயம்பிடைப் பரப்பி
ப--7 |
|
|
|