| |
|
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை |
|
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, |
|
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி, |
|
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய, |
5 |
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; |
|
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை |
|
விரிமலர் புரையும் மேனியை; மேனித் |
|
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில் |
|
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை |
10 |
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- |
|
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும் |
|
ஏவல் உழந்தமை கூறும், |
|
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே. |
| |
|
இணைபிரி அணி துணி பணி எரி புரைய |
15 |
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் |
|
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு |
|
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி |
|
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில் |
|
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் |
20 |
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் |
|
றுணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு |
|
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் |
|
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி |
|
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை |
25 |
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் |
|
பொரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் |
|
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் |
|
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை. |
|
சொல்லுள் அடங்காப் பெரும் புகழ்
|
|
'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து, |
30 |
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! |
|
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! |
|
தெருள நின் வரவு அறிதல் |
|
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே; |
|
அன்ன மரபின் அனையோய்! நின்னை |
35 |
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? |
|
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின் |
|
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை |
|
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம் |
|
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும். |
| |
40 |
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் |
|
அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ; |
|
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை |
|
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ; |
|
அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும் |
45 |
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; |
|
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல் |
|
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ; |
|
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் |
|
புலமும், பூவனும், நாற்றமும், நீ; |
50 |
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், |
|
நிலனும், நீடிய இமயமும், நீ. |
|
அதனால், |
|
'இன்னோர் அனையை; இனையையால்' என, |
|
அன்னோர் யாம் இவண் காணாமையின், |
55 |
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய |
|
மன்னிய முதல்வனை ஆதலின், |
|
நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே! |
|
நின் ஒக்கும் புகழ் நிழலவை; |
|
பொன் ஒக்கும் உடையவை; |
60 |
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; |
|
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை; |
|
மண்ணுறு மணி பாய் உருவினவை; |
|
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை. |
|
ஆங்கு, |
65 |
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை |
|
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என, |
|
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்- |
|
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே. |