|
திருமாலின் பெருமை ஊழிகளின்
தோற்றம்
|
|
தொல் முறை இயற்கையின் மதியொ |
|
. ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக, |
|
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட, |
|
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல, |
5 |
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, |
|
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; |
|
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்; |
|
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு |
|
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று |
10 |
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, |
|
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் |
|
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்; |
|
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும், |
|
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய |
15 |
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை |
| |
|
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய |
|
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு |
|
ஊழி யாவரும் உணரா; |
|
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது. |
| |
20 |
நீயே, 'வளையொடு புரையும் வாலியோற்கு அவன் |
|
இளையன்' என்போர்க்கு இளையை ஆதலும், |
|
'புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு |
|
முதியை' என்போர்க்கு முதுமை தோன்றலும், |
|
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த |
25 |
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், |
|
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை |
|
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே. |
| |
|
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் |
|
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில |
30 |
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் |
|
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் |
|
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் |
|
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு, |
|
'புள்ளி நிலனும் புரைபடல் அரிது' என, |
35 |
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. |
| |
|
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து, |
|
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் |
|
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு, |
|
முடிகள் அதிர, படிநிலை தளர, |
40 |
நனி முரல் வளை: முடி அழிபு, இழிபு, |
|
தலை இறுபு தாரொடு புரள |
|
நிலை தொலைபு, வேர், தூர், மடல், |
|
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப் |
|
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல் |
45 |
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, |
|
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு, |
|
அளறு சொரிபு, நிலம் சோர, |
|
சேரார் இன் உயிர் செகுக்கும் |
|
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே: |
50 |
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; |
|
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே. |
|
திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள்
|
|
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி; |
|
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்; |
|
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த |
55 |
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், |
|
சாயல் நினது, வான் நிறை என்னும் |
|
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே: |
|
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் |
|
எவ் வயினோயும் நீயே. |
|
உருவமும், உணவும், வெளிப்பாடும்
|
60 |
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! |
|
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும், |
|
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், |
|
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் |
|
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும், |
65 |
நின் உருபுடன் உண்டி; |
|
பிறர் உடம்படுவாரா |
|
நின்னொடு புரைய |
|
அந்தணர் காணும் வரவு. |
| |
|
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர, |
70 |
மூவா மரபும் ஓவா நோன்மையும் |
|
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் |
|
... ... ... .. .... .... ... ... மரபினோய் நின் அடி |
|
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்; |
|
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம், |
75 |
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் |
|
'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!' எனவே. |