|
திருமாலைத் தொழுவார் பெறும் பேறு
|
|
மணி வரை ஊர்ந்த மங்குல்
ஞாயிற்று
|
|
அணி வனப்பு அமைந்த பூந் துகில்,
புனை முடி,
|
|
இறு வரை இழிதரும் பொன் மணி
அருவியின்
|
|
நிறனொடு மாறும் தார், புள்ளுப்
பொறி புனை கொடி,
|
5
|
விண் அளி கொண்ட வியன் மதி அணி
கொளத்
|
|
தண் அளி கொண்ட அணங்குடை நேமி
மால்!
|
|
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு
அணிந்த
|
|
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
|
|
நேமியும் வளையும் ஏந்திய கையான்
|
10
|
கருவி மின் அவிர் இலங்கும்
பொலம் பூண்,
|
|
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த
நின்
|
|
திரு வரை அகலம் தொழுவோர்க்கு
|
|
உரிது அமர் துறக்கமும் உரிமை
நன்கு உடைத்து.
|
|
எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை
|
|
சுவைமை, இசைமை, தோற்றம்,
நாற்றம், ஊறு,
|
15
|
அவையும் நீயே, அடு போர்
அண்ணால்!
|
|
அவைஅவை கொள்ளும் கருவியும்
நீயே;
|
|
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
|
|
ஒன்றனில் போற்றிய விசும்பும்
நீயே;
|
|
இரண்டின் உணரும் வளியும் நீயே;
|
20
|
மூன்றின் உணரும் தீயும் நீயே;
|
|
நான்கின் உணரும் நீரும் நீயே;
|
|
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
|
|
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ்
உலகமும்,
|
|
மூலமும், அறனும், முதன்மையின்
இகந்த
|
25
|
காலமும், விசும்பும், காற்றொடு
கனலும்.
|
|
பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்
|
|
தன் உரு உறழும் பாற்கடல்
நாப்பண்,
|
|
மின் அவிர் சுடர் மணி ஆயிரம்
விரித்த
|
|
கவை நா அருந் தலைக் காண்பின்
சேக்கைத்
|
|
துளவம் சூடிய அறிதுயிலோனும்
|
30
|
மறம் மிகு மலி ஒலி மாறு அடு
தானையால்,
|
|
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர்
அகற்றும்
|
|
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ்
புழுதியின்,
|
|
நிறன் உழும் வளை வாய்
நாஞ்சிலோனும்
|
|
நானிலம் துளக்கு அற முழு முதல்
நாற்றிய
|
35
|
பொலம் புனை இதழ் அணி மணி மடற்
பேர் அணி
|
|
இலங்கு ஒளி மருப்பின் களிறும்
ஆகி,
|
|
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!
|
|
|
|
படர் சிறைப் பல் நிறப்
பாப்புப் பகையைக்
|
|
கொடியெனக் கொண்ட கோடாச்
செல்வனை;
|
40
|
ஏவல் இன் முது மொழி கூறும்,
|
|
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ!
நல் புகழவை;
|
|
கார், மலர்ப் பூவை, கடலை, இருள்,
மணி,
|
|
அவை ஐந்தும் உறழும் அணி கிளர்
மேனியை;
|
|
வலம்புரி, வாய்மொழி, அதிர்பு
வான், முழக்குச் செல்,
|
45
|
அவை நான்கும் உறழும் அருள்,
செறல், வயின் மொழி:
|
|
முடிந்ததும், முடிவதும்,
முகிழ்ப்பதும் அவை மூன்றும்
|
|
கடந்து, அவை அமைந்த கழலின்
நிழலவை;
|
|
இருமை வினையும் இல, ஏத்துமவை:
|
|
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
|
50
|
அடை இறந்து அவிழ்ந்த வள்
இதழ்த் தாமரை
|
|
அடியும், கையும், கண்ணும், வாயும்:
|
|
தொடியும், உந்தியும், தோள் அணி
வலயமும்,
|
|
தாளும், தோளும், எருத்தொடு,
பெரியை;
|
|
மார்பும், அல்குலும், மனத்தொடு,
பரியை;
|
55
|
கேள்வியும், அறிவும், அறத்தொடு,
நுண்ணியை;
|
|
வேள்வியும், மறனும், விருப்பொடு
வெய்யை;
|
|
அறாஅ மைந்தின், செறாஅச்
செங்கண்,
|
|
செரு மிகு திகிரிச் செல்வ! வெல்
போர்
|
|
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந்
தார்ப்
|
60
|
புரி மலர்த் துழாஅய் மேவல்
மார்பினோய்!
|
|
அன்னை என நினைஇ, நின் அடி
தொழுதனெம்;
|
|
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம்
வாழ்த்தினெம்
|
|
முன்னும் முன்னும் யாம் செய் தவப்
பயத்தால்:
|
|
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!
|