|
மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்
|
|
ஒளிறு வாட்பொருப்பன் உடல்
சமத்து இறுத்த
|
|
களிறு நிரைத்தவைபோல்
கொண்மூ நெரிதர,
|
|
அரசு படக் கடந்த ஆனாச்
சீற்றத்தவன்
|
|
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி
பயிற்றி,
|
5
|
ஒடுங்கார் உடன்றவன் தானை வில்
விசை
|
|
விடும் கணை ஒப்பின் கதழ் உறை
சிதறூஉ,
|
|
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி,
அவன்
|
|
வண்மைபோல் வானம் பொழிந்த
நீர் - மண்மிசை
|
|
ஆனாது வந்து தொகுபு ஈண்டி,
மற்று-அவன்
|
10
|
தானையின் ஊழி...... தாவூக்
கத்தின்,
|
|
போன நிலம் எல்லாம் போர் ஆர்
வயல் புகுத-
|
|
.... ... ... நீக்கிப் பு...
|
|
கான மலைத்தரை கொன்று மணல
பினறீ
|
|
வான மலைத்த ...... வ
|
15
|
....... லைத்தவ மண முரசு எறிதர,
|
|
தானைத் தலைத்தலை வந்து மைந்து
உற்று,
|
|
மைந்தரும் மகளிரும் கரையையும் வையையையும் சேர்கின்ற
அழகு
|
|
பொறிவி யாற்றுறி - துவர், புகை,
சாந்தம்,
|
|
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற
|
|
நறவு அணி பூந் துகில் நன் பல
ஏந்தி,
|
20
|
பிற தொழின ... ம் பின்பின்
தொடர;
|
|
செறி வினைப் பொலிந்த செம்
பூங் கண்ணியர்,
|
|
ஈர் அமை வெட்சி இதழ் புனை
கோதையர்,
|
|
தார் ஆர் முடியர், தகை கெழு
மார்பினர்;
|
|
மாவும், களிறும், மணி அணி வேசரி,
|
25
|
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;
|
|
வேல் ஆற்றும் மொய்ம்பனின்,
விரை மலர் அம்பினோன்-
|
|
போல், ஆற்று முன்பின் புனை கழல்
மைந்தரொடு,
|
|
தார் அணி மைந்தர் தவப் பயன்
சான்மென-
|
|
கார் அணி கூந்தல், கயற் கண்,
கவிர் இதழ்,
|
30
|
வார் அணி கொம்மை, வகை அமை
மேகலை,
|
|
ஏர் அணி இலங்கு எயிற்று, இன்
நகையவர்-
|
|
'சீர் அணி வையைக்கு
அணிகொல்லோ? வையைதன்
|
|
நீர் அணி நீத்தம் இவர்க்கு
அணிகொல்?' எனத்
|
|
தேருநர் தேருங்கால், தேர்தற்கு
அரிது காண்-
|
35
|
தீரமும் வையையும் சேர்கின்ற கண்
கவின்.
|
|
திருமருத முன்துறைக் காட்சிகள்
|
|
மண் கணை முழவின் இன் கண்
இமிழ்விற்கு
|
|
எதிர்வ பொருவி ..... மேறு மாறு
இமிழ்ப்ப,
|
|
கவர் தொடை நல் யாழ் இமிழ,
காவில்
|
|
புகர் வரி வண்டினம் பூஞ் சினை
இமிர,
|
40
|
ஊது சீர்த் தீம் குழல் இயம்ப,
மலர்மிசைத்
|
|
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
|
|
....... துடிச் சீர் நடத்த வளி நடன்
|
|
மெல் இணர்ப் பூங் கொடி மேவர
நுடங்க,
|
|
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு
கொள்ளும்-
|
45
|
தீம் புனல் வையைத் திருமருத
முன்துறையால்.
|
|
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல்
இருங் கூந்தல்,
|
|
... ... ... புரை தீர் நெடு மென்
|
|
தோள் தாழ்பு தழை மலர் துவளா
வல்லியின்,
|
|
நீள் தாழ்பு தோக்கை, நித்தில
அரிச் சிலம்பு,
|
50
|
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
...
|