தாமந் தலைபுனை பேஎ நீர்வையை
85 நிற்பயம் பாடி விடிவுற் றேமாக்க
நிற்படிந்து நீங்காமை யின்றுபுணர்ந் தெனவே.
என்பது, தலைமகன் தலைமகளோடு புனலாடினானெனக் கேட்டு
இன்புற்ற செவிலித்தாய் தோழியை நீங்களாடிய புனலணியின்பங்
கூறுகென்றாட்கு அப் புனலணியின்பமும் பல்வேறு வகைப்பட்ட
இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, என்றும் இந்த நீரணியின்பம்
பெறுக யாமென்றது.
மையோடக் கோவனார் பாட்டு; பித்தாமத்தர் இசை;
பண்ணுப் பாலையாழ்.
உரை
1 - 10: திரையிரும் . . . . . . . . . . வையைப் புனல்
(இ - ள்.) வான் - முகில்கள், திரைபனி இரும் பௌவம் அறச்
செவ்விதா முகந்து - அலைகளையும் குளிர்ச்சியையும் உடைய கரிய கடல்
வற்றிப்போகும்படி தாமே நேரில் சென்று நீரை முகந்துகொண்டு வந்து,
உரவு உரும் உடன்று ஆர்ப்ப - வலிய இடியேறு சினந்து ஆரவாரஞ்
செய்யாநிற்ப, ஊர்பொறை கொள்ளாது - தம்மேல் ஏறின பாரம்
தாங்கமாட்டாமல், வயறு அழிபு - தம் வயிறு கிழிந்தமையாலே, கரை
உடை குளம் என - கரையுடைந்த குளத்தின் நீர் கழலுமாறுபோலக்
கழலா நிற்ப, வரை வரை தொடுத்த - சையமலையின் சிகரங்கள் தோறும்
தொடுக்கப்பட்ட, வயங்கு வெள் அருவி - விளங்கா நின்ற வெள்ளிய
அருவிநீர், பெயலால் பொலிந்து - அம் மழை யானே பொலிவுற்று,
பெரும்புனல் பல - மற்றையிடங்களிற் சேரும் பல நீர்களோடும் கூடி,
வையைப் புனல் நந்த - வையை யாற்றின் நீர் பெருகி வெள்ளமாக,
நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்த - உயிர்கட்கு நலனெல்லாம்
மிகும்படியும் மருதநிலம் அழகு மிகும்படியும் குறிஞ்சிமுதலிய
வன்புலங்கள் வளம் பெருகும்படியும், வலன் இரங்கும் முரசின்
தென்னவர் உள்ளிய நிலன்உற - வெற்றியுண்டாக முழங்கும்
முரசினையுடைய பாண்டிய மன்னர் கொள்ளக் கருதிய நாட்டைச்
சேருதற்கு, நிமிர்தானை நெடுநிரை நிவப்பு அன்ன - நிமிர்ந்து செல்லும்
அப் பாண்டியருடைய படையினது நெடிய அணியினது எழுச்சி போல,
இடம் செலவு அரிது என்னாது - யான் செல்லுமிடம் அடைதற்கரியது
என்று கருதாமலும், இருள் இரவு பகலாக |