வந்தன்று - அவ்வெள்ளம் இருளை
உடைய இரவிது பகலிது என்று
கருதாமலும் இருபொழுதினும் ஒழுகி வந்தது;
(வி-ம்.) முகில் மழைபெய்ய அருவிநீர் பெருகிப்
பிற நீரோடும்
கூடி வையை நீரிற் கலந்து வெள்ளமாகித் தென்னவர் படைபோல
அரிதென்னாது இரவும் பகலும் ஒழுகி வந்தது என முடிக்க.
தென்னவர் தானை உள்ளிய நிலன்உற இரவிருள் பகலாக
இடமரிது செலவென்னாது நிமிர்தல் போலப் புனலும் இரவிருள் பகலாக
இடமரிது செலவென்னாது வந்தன்று எனக் கூட்டுக.
இதன்கண் புனல் ஒழுக்கிற்கு உவமை கூறுவார்போல இப்புலவர்
பெருமான் பாண்டிய மன்னரின் படைச்சிறப்புக் கூறிய நயமுணர்க.
பனி - குளிர்ச்சி; பனி இரும்பௌவம் என மாறுக.
பௌவம் -
கடல் உரவு - வலிமை. உரும் - இடி. நீரைச் சூலாகக் கூறுவதற்கேற்ப
முகில் வயிறு அழிபு என்று கூறப்பட்டது. வரையிரண்டனுள் முன்னையது
மலை; பின்னையது சிகரம். இனி மலைகள்தோறும் எனினுமாம். வலன்
வெற்றி. இரங்கும் - முழங்கும். தென்னவர் - பாண்டியர். உள்ளிய -
கொள்ளக் கருதிய.
நாடு - மருதநிலம். புலம் - வன்புலம். அவை முல்லையும்
குறிஞ்சியும் என்க. வந்தன்று - வந்தது.
(பரிமே.) வெற்றியுண்டாக ஒலிக்கும் முரசினையுடைய
தென்னவர்
கொள்ளக் கருதிய நாட்டையுற நிமிரும் அவர் தானையது நெடு நிரையின்
நிமிர்ச்சி ஒக்க யாம் செல்லுமிடம் அரிதென்னாது இருளையுடைய இரவும்
பகலாக வந்தெனக் கூட்டுக.
11. மென்புலங்கள் அழகுபெற வன்புலங்கள் விளைய வந்தது.
11 - 15: நளியிருஞ்சோலை . . . . . . . பரப்பி
(இ - ள்.) நளி இருஞ் சோலை நரந்தந் தாஅய் -
அப் புனல்
செறிந்த கரிய சோலைகளிலுள்ள நரந்தம்புற்களின் மேலே பரந்து,
ஒளிர்சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு - விளங்குகின்ற
கிளைகளையுடைய வேங்கைமரத்தின்கண் மலர்ந்த பூங்கொத்தினின்றும்
உதிர்ந்த பூக்களோடு கூடி, துளியின் உழந்த தோய்வு அரும்
சிமைதொறும் - மழையாலே அலைக்கப்பட்ட எய்துதற்கரிய
மலைச்சிகரங்கள் தோறும் உளவாய், வளிவாங்கு சினைய மாமரம் -
காற்றாலே வளைப்புண்டு முறிந்த கொம்புகளையுடைய பெரிய மரங்களை,
வேர்கீண்டு - வேரோடு அகழ்ந்து தள்ளி உருட்டிக் கொணர்ந்து,
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி - இவ்வாறாகக் குறிஞ்சியினும்
முல்லையினும் உள்ள பொருள்களை வாரிக் கொண்டுவந்து
மருதநிலத்தினும் நெய்த னிலத்தினும் பரப்பி;
(வி-ம்.) நளி - செறிவு. இருஞ்சோலை - கரியபொழில்; இருண்டு
தழைத்த பொழில் என்க. நரந்தம் - ஒருவகை மணப்புல்; "நரந்த நாறுந் |
|
|
|