ஒருசார் என்பதனைப் பாக்கங்கொண்டென
முதலிய ஏனை என
வென்னெச்சங்களோடும் கூட்டியுரைக்க.
உண்டதனால் வயிறுவிலாப் புடைத்த உழவர்க்குச் சினை
வளர்தலாலே விலாப்புடைத்த வாளைமீன் உவமை. பரத்தந்து-பரந்து;
இச்செய்தெ னெச்சத்தைச் செயவெனெச்ச மாக்குக.
(பரிமே.) 35. நாற்றங்கால் வண்டலிட்டு மேடாயிற்றென.
30. ஒருசார் என்பதனைப் பின்பில் எனவெ னெச்சங்களோடும்
கூட்டுக.
38-9 "விலாப்புடை மருங்குல் விசிப்ப மாந்திய"
(புறநா. 41: 6) உழவர்.
40-50: இறுவரை......................................வையைவனப்பு
(இ - ள்.) இறுவரை புரையுமாறு இருகரை ஏமத்து - நீராலே
குத்துண்டு இடிந்தமையாலே அடிப்பக்கம் இடிந்த மலைகளைப் போன்று
நிற்கும் இரண்டு கரைகளாகிய காவலுள் அடங்கி, வரை புரை உருவின் -
வெள்ளிப் பனிமலையின் சிகரங்களை ஒத்த வடிவமுடைய, நுரை பல
சுமந்து - நுரைகள் பலவற்றையும் சுமந்து கொண்டு, பூ வேய்ந்து பொழில்
பரந்து - பூவானே மூடப்பட்டுச் சோலைகளினூடே பரந்து, துனைந்து
ஆடுவார் ஆய் கோதையர் காதின தளிர் செரீஇ - தன்னிடத்தே
விரைந்து விளையாடாநின்ற ஆராய்ந்தணிந்த மலர் மாலையினையுடைய
மகளிரின் செவியிடத்தே தளிரைச் செருகியும், அலர் தண்டாரவர் கண்ணி
பறித்து - மலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த மைந்தருடைய தலையின்கண்
சூடிய மாலைகளைப் பறித்தும், கைவளை தொய்யகம் புனை துகில்
மேகலை காஞ்சி - மகளிரின் கையிலணிந்த வளையல்களும்
தலையிலணிந்த தலைப்பாளை என்னும் அணியும் உடுத்த ஆடையும்
அவ்வாடையின் உள்ளே அணியப்படும் மேகலை என்னும் அணிகலனும்
ஆடையின் புறத்தே அணியப்படும் காஞ்சி என்னும் அணிகலனும்,
புனைதுகில் ஆழி வாகுவலயம் - மைந்தர் உடுத்த ஆடையும் அணிந்த
மோதிரங்களும் தோள்வலயங்களும், எல்லாம் கவரும் இயல்பிற்றாய் -
ஆகிய இவற்றை எல்லாம் கவர்ந்து கொள்ளும் தன்மையுடையதாய்,
மாறு அட்ட தானையான் வையை வனப்பு - பகைவரைக் கொன்ற
படையினையுடைய பாண்டியனது வையை யாற்றின்கண்ணே வந்த
புதுப்புனலின் இயல்பு, தென்னவன் ஒன்னார் உடைபுலம் புக்கற்று
- பாண்டியமன்னன் பகைவருடைய தோற்றற்குரிய நிலத்தின் கண்
புகுந்த தன்மையை ஒத்தது;
(வி - ம்.) இறுவரை - அடிப்பக்கம் இற்ற மலை. இது
நீராற்குத்துண்டு நிற்கும் இடிகரைக்கு உவமை. புரையுமாறு - ஒக்கும்படி. |
|
|
|