வரை - சிகரம்: பனிமலையின்
சிகரம் என்க. இது நுரைத்திரட்சிக்கு
உவமை. ஏமம் - காவல். துனைந்து - விரைந்து. கோதையர் - மகளிர்.
தாரவர் - மைந்தர். கோதையர் காதிற் செருகி அவர் தம் வளை
தொய்யகம் மேகலை காஞ்சி புனைதுகில் என்னும் இவற்றையும், தாரவர்
கண்ணி பறித்து அவர்தம் ஆழி புனை துகில் வாகுவலயம் என்னும்
இவற்றையும் கவருமியல்பிற்றாய் எனக் கொண்டு கூட்டுக. புனை துகில்
இருபாலார்க்கும் கூட்டப்பட்டது.
செரீ - செருகி. கண்ணி - தலையிற்சூடும் மாலை. ஆழி
-
மோதிரம். தொய்யகம் - ஒருவகைத் தலைக்கோல அணி இதனைத்
தலைப்பாளை என்பர் சிலப்பதிகார அரும்பத உரை ஆசிரியர்.
அடியார்க்கு நல்லார் 'பூரப்பாளை' என்பர். "தொய்யகம் தொடர்ந்த
தலைக்கணி" (சிலப். 6: 107) என்றார் இளங்கோவடிகளார்.
மேகலை - இருவடமாய் ஆடையினுள்ளே அணிவதோர்
அணிகலன். காஞ்சி - எண்வடமாய் ஆடையின் மேலணியும் அணிகலன்.
இவ்வாறு கவர்தலானே பாண்டியன் பகைநிலத்தே புக்குழி
அவனை ஒத்தது வையை என்க. தென்னவன் - பாண்டியன். உடைபுலம்:
வினைத்தொகை மாறு - பகை. வனப்பு என்பது இயல்பு என்னும்
பொருட்டாய் நின்றது.
(பரிமே.) வையை வனப்பு இது.
51 - 60: புரிந்த.....................................வடிவு
(இ - ள்.) புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் யாவரானும்
விரும்பப்பட்ட அழகினையுடைய பாண்டிய மன்னனது
வையையாற்றின்கண் நீராடாநின்ற மகளிருள்ளே, புனல் துரந்து தூவ -
சில மகளிர் சிவிறியினின்றும் நீரைச் செலுத்திச் சிதறாநிற்ப, தூமலர்க்
கண்கள் அமைந்தன. ஏனை மகளிர் தூய மலர் போன்ற கண்கள்
எல்லாம் அந்நீரை ஏற்று இமைத்தலின்றி அமைந்தனவாக, ஆங்கண்
கை புதைஇயவளை அவருள் ஒருத்தி - அப்பொழுது அவ்விளையாட்டிற்
றேற்றுத் தன் கண்களைப் புதைத்தவளை அம் மகளிருள் ஒருத்தி,
ஏக்கழுத்து - வெற்றியாலே இறுமாந்து, நாணால் கரும்பின் அணை
மெல்தோள் போக்கிச் சிறைப்பிடித்தாள் - தன் கழுத்தில் அணிந்த
பொன்னாணாலே தொய்யில் கரும்பு எழுதப்பட்ட அணையை ஒத்த
மெல்லிய தோள்களைக் கட்டிச் சிறையாகப் பிடித்தாள், ஓர் பொன்னங்
கொம்பு - அது கண்ட பொற்கொடி போல்வாள் ஒருத்தி, பரிந்து
அவளைக் கைப்பிணை நீக்குவான் பாய்வாள் - அங்ஙனம்
சிறையானவளுக்கு இரங்கி அவளைக் கையாற் பிணிக்கப்பட்ட
அச்சிறையினின்றும் விலக்கும் பொருட்டுப் பாய்ந்தாள், இரும்பு ஈர்வடி
ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் - அங்ஙனம் பாய்ந்தவளுடைய
வாளால் அரியப்பட்ட மாவடுவின் பிளப்பினை ஒத்து "மையாலே
விளங்காநின்ற |
|
|
|