பக்கம் எண் :

பரிபாடல்- வையை107

கண்ணொளி பாய்ந்து கதுவுதலானே, புதுப்புனல் செம்மை சென்று இருள்
ஆயிற்று - புதிய அந் நீரினது சிவந்த நிறம் போய் நீல நிறமாயிற்று,
வையைப் பெருக்கின் வடிவு - வையையாற்றின் புதுநீர் வெள்ளத்தின்
அழகு இத் தன்மைத்து;

      (வி - ம்.) ஆறாடுவார் தம்முள் புனல்தூவ, அவருள் ஒருத்தி
அதற்கு அஞ்சிக் கண் புதைத்தாள்: அவளை அவருள் ஒருத்தி
ஏக்கழுத்து நாணாமல் போக்கிச் சிறைபிடித்தாள்; அவட்குப் பரிந்து
ஒருத்தி பிணை நீக்கப் பாய்ந்தாள்; அவள் கண்ணொளியாலே புதிய
செம்புனல் நீல நிறமாயிற்று என்க. இரக்கமுடைமையும் எழிலுடைமையும்
கூறுமாற்றானே பொன்னங் கொம்பெனப்பட்டவள் தலைவியாதல்
குறிப்பான் உணர்த்தப்பட்டமை உணர்க.

      புரிந்த தகையினான் என்றது பாண்டியனை. 'புரிந்த தகை - மிக்க
தகைமை' என்பர் பரிமேலழகர். துரந்து - சிவிறியினின்றும் செலுத்தி
என்க. அந் நீர் படுதற்கு அஞ்சாமல் ஏற்றுக் கோடல் வெற்றியாகவும்
அஞ்சி இமைப்பதும் கண்புதைப்பதும் தோல்வியாகவும் கொள்ளப்பட்டன.
தோற்றாரைச் சிறைசெய்தல் மரபாகலின், வென்றவள் கண் புதைத்துத்
தோற்றாளைச் சிறை பிடித்தாள். கைப்பிணை - கையாற் பிணிக்கப்பட்ட
கட்டு. இரும்பு - இரும்பாலியன்ற வாள். வடி - மாம் பிஞ்சு.
இரும்பாலீர்ந்த மாவடு துவருடைமையானே கறுத்திருத்தல் மை
விளங்குதற்கு உவமை. இவ்வுவமை நினைந்து மகிழற்பாற்று. வடிவு
- அழகு.

      இதுகாறும் நீரணியின்பம் கூறப்பட்டது; இனி, தலைவனுடைய
காதன்மை கூறப்படும்.

      (பரிமே.) 55. (ஏக்கழுத்து) இறுமாந்த

      55. தொய்யிற் கரும்பினையுடைய.

      இவ்வளவும் (1. முதல் 60. வரையில்) தோழி புனலணி இன்பம்
கூறி, மேல் தலைமகன் காதன்மை கூறுகின்றாள்.

61-64: விரும்பிய . . . . . . . கண்

      (இ - ள்.) விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர - இங்ஙனம்
விரும்பப்பட்ட நீராட்டிற்கேற்ற ஈர அணியை உடைய உடல் ஈரம்
உலர்ந்து வெப்பமுடையதாகும் பொருட்டு, சுரும்பு ஆர்க்கும் சூர்
நறா ஏந்தினாள் - தலைவி வண்டுகள் சூழ்ந்து ஆரவாரித்தற்குக்
காரணமான கடுப்புடைய கள்ளைப் பருகுதற்குத் தன் கையின்கண்
ஏந்தினாள், கண் நெய்தல் - அங்ஙனம் ஏந்திய பொழுது அவன்
கண் நெய்தற்பூவைப் போன்று கறுத்திருந்தன, கூர் நறா ஆர்ந்தவள்
கண் - கூர்த்த களிப்பையுடைய அக் கள்ளினைப் பருகிய பின்னர்
அவளுடைய கண்கள் சிவந்து, பேர்மகிழ் செய்யும் பெரு நறாப்
பேணிய -கண்டார்க்குப்