பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்
பெரிய நறவம்பூவை ஒத்திருந்தன;
(வி - ம்.) விரும்பிய - விரும்பப்பட்ட. ஈர அணி
- ஈரணி என
அகரங்கெட்டுப் புணர்ந்தது. மெய்யீரம் - உடலின்கண் உள்ள ஈரம்.
சுரும்பு - வண்டு. சூர் - கடுப்பு. நறா-கள். பெருநறா - பெரிய நறவம்பூ.
ஆர்ந்தவள் - பருகியவள். நெய்தல்மலர் கருநிறத்திற்கும் நறவமலர்
செந்நிறத்திற்கும் உவமைகள்.
(பரிமே.) 67. பேணல்: ஈண்டு, உவமச் சொல்.
65 - 69: கண்ணியல்.............................நடுக்குற
நண்ணி
(இ - ள்.) கண் இயல் கண்டு ஏத்தி - அங்ஙனம் சிவந்த
கண்ணினது அழகினைக் கண்டு பாராட்டி, காரிகை நீர் நோக்கினை
- அக் கண்களின் அழகிய தன்மையுடைய நோக்கங்களை,
பாண் ஆதரித்து - இசைப்பாட்டின்கண் இயைத்துப் பாட விரும்பி,
பலபாட - தலைவன் பற்பல பாடல்களையும் பாடாநிற்ப, ஒருத்தி
அப் பாட்டுப் பேணாது பேதுற - அப் பாடல்களைக் கேட்டாருள்
ஒருத்தி அப் பாடல்கள் பாடுவான் தன் காதலியைப் பாடும் பாடல்கள்
என்பதனை அறியாது தன்னை விரும்பிப் பாடும் பாடல் எனக் கருதி
அவனைக் கூடும் கருத்தாலே துன்புறா நிற்ப, நன்ஞெமர் மார்பன்-அவள்
கருத்தறிந்த நன்கு விரிந்த மார்பினையுடைய தலைவன், எனக்கு
என்னை வருவது என்று இனையா-இந் நிகழ்ச்சியினைத் தலைவிதான்
அறிவளேல் எனக்கு எத்தகைய துன்பந்தான் வருமோ அறிகின்றிலேனே
என்று கருதி மனம் நொந்து, நண்ணி நடுக்குற - அவ்விடத்தினின்றும்
பெயர்ந்து தலைவியினை அணுகி அச்சத்தாலே உடல் நடுங்கி நிற்ப;
(வி - ம்.) சிவந்த கண்ணின் இயல் என்க. காரிகை
நீர்நோக்கம்
- அழகிய நீர்மையுடைய பார்வை. பாண். பாடல்: 'பாண்சாதி' என்பர்
பரிமேலழகர். ஆதரித்து - விரும்பி: அக் கண்களைப் பொருளாகக்
கொண்டு பலபாட என்க. கண்களின் நோக்கத்தைப் பாடலின் இயைத்துப்
பாட விரும்பி என்க. அங்ஙனம் பாடும் பாடல்களை,
"பவள வுலக்கை கையாற் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை யல்ல கொடிய கொடிய"
(சிலப். கானல்-20)
"புன்னை நீழற் புலவுத் திரைவாய்
அன்ன நடப்ப நடப்பாள் செங்கண்
அன்ன நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம்"
(மேற்படி-2)
|
|
|
|