பக்கம் எண் :

பரிபாடல்- வையை109

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய"
(மேற்படி - 22)
எனவரும் சிலப்பதிகாரங் கண்டுணர்க.

      ஒருத்தி - மற்றொருத்தி, பேணுதல் - பாடுவான். கருத்தறிதல்.
பேது துன்பம். தலைவியால் எனக்கு எத்தகைய இடர் வருமோ என்று
கருதி என்க. இனையா - இனைந்து: நொந்து. ஞெமர் - பரந்த
அச்சத்தாலே நடுங்க என்க.

      (பரிமே.) 65. காரிகை நீர்மையினையுடைய நோக்கு.

      66. (பாண்) பாண்சாதிபோல.

      67. அப் பாட்டுத் தன் காதலியைப் பாடுகின்றது என்று அறியாது
வேறொருத்தி கேட்டு அவனோடு கூடுதற்கு வருத்தமுற்று.

      69. நல்ல பரந்த மார்பன்.

      தலைவன் தலைவியின் கண்ணியல் கண்டு அவற்றின் காரிகை
நீர்மையைப் பாட ஒருத்தி பேணாது பேதுறத் தலைவன் அதுகண்டு
இனைந்து தலைவியை நண்ணி நடுங்காநிற்ப என்க.

70-76: சிகை கிடந்த . . . . . . ஆடுங்கடை

      70 - 76: சிகை கிடந்த ஊடலின் செங்கண் சேப்பு ஊர
-முன்னரே குறைகிடந்த ஊடல் காரணமாய்ச் சிவந்துள்ள தன் கண்கள்
இந் நிகழ்ச்சி காரணமாய்ப் பெரிதும் சிவக்க, வகை தொடர்ந்த ஆடலுள்
நல்லவர் தம்முள் - வகுப்புப் பொருந்திய அந் நீராட்டின்கண் வந்த
மகளிருள் வைத்து, பகை தொடர்ந்து - முன்னர்ப் பாட்டுப்பேணாது
பேதுற்ற அவளோடு தலைவி பகைமைமிக்கு, நனி வெகுண்டு கோதை
பரியூஉ - மிகவும் சினந்து தன் மாலையினை அறுத்து எறியாநிற்ப, ஆறு
ஆடுமேனி அணிகண்டதன் அன்பன் - அப்பொழுது நீராட்டினாலே
பொலிவுற்ற தலைவியின் மேனியினது அழகைக் கூர்ந்து நோக்கிநின்ற
அவள் காதலன் அங்ஙனம் சினந்த தலைவிக்கு அஞ்சி, சேறு ஆடு
மேனி திரு நிலத்து உய்ப்ப - தனது சந்தனம் பூசப்பட்ட மேனியை
அழகிய நிலத்திலே கிடத்தி வணங்க, தீர்வு இலதாகச் சிரம் மிதித்துச்
செருவுற்றாள் - அதனானும் தன் சினந் தீர்தல் இலாததாக
அத் தலைவனது தலையில் உதைத்து ஊடிக்கொண்டாள், ஊருடன்
செம்புனல் ஆடுங்கடை - ஊரவரோடு, புதுநீர் ஆடியவிடத்து;

      (வி - ம்.) சிகை - குறை. முன் ஊடலிற் சிவந்ததன் மேலும்
சேப்பூர என்க... சேப்பூர - சிவக்க: வகை - வகுப்பு: நீராடுவார் தம்முள்