பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்11

நீயே நினக்கு நிகராவை என்பது கருத்து உயிரும் அழியாப் பொருளாதல
் பற்றி 'மன்னுயிர்' என்றார். முதல்வனை என்புழி ஐகாரஞ் சாரியை.

55 - 61: நின்னொக்கும்...........................மார்பினவை

      (இ - ள்.) நின் ஒக்கும் புகழ் நிழலவை - நின்னை ஒப்பார் பிறர்
" இலர் எனினும் நின்னையே ஒக்கும் புகழினையும் நீ உடையை, பொன்
ஒக்கும் உடையவை - பொன்னை நிறத்தானே ஒக்கின்ற ஆடையினை
உடையை, புள்ளின் கொடியவை - கருடக்கொடியை உடையை, புரி
வளையினவை - முறுக்குடைய சங்கினையுடையை, எள்ளுநர்க் கடந்து
அட்ட இகல் நேமியவை - இகழவாராகிய பகைவரை வென்று கொன்ற
மாறுபாட்டினையுடைய சக்கரப்படையினையுடையை, மண்ணுறு மணி பாய
உருவினவை-கழுவப்பெற்ற நீலமணியினது ஒளி பரந்தாலொத்த
திருமேனியை உடையை, எண்ணிறந்த புகழவை - அளவிறந்த
புகழ்களையுடையை, எழின் மார்பினவை - அழகிய மார்பினையுடையை,
ஆங்கு - என இவ்வாறு கூறி;


      (வி - ம்.) நிழல் - ஒளி, புகழாகிய ஒளி என்க. புள் கருடப்
பறவை, புரி - முறுக்கு. எள்ளுநர் - பகைவர். மண்ணுறு - கழுவப்பட்ட.
மணி - நீலமணி. பாய் - பரவினாலொத்த என்க.

      நிழலவை, உடையவை, கொடியவை, வளையினவை, நேமியவை,
உருவினவை, புகழவை, மார்பினவை என்பன எட்டும், முன்னிலை
ஒருமைக் குறிப்புவினை முற்றுக்கள் என்றுணர்க. இவை
பெரும்பான்மையும் நிழலினை உடையினை என இன்சாரியை
பெற்றுவருதலே யன்றி இங்ஙனம் வருதல் இல்லை. இவற்றுள்
இன்சாரியையன்றி அகரச்சாரியை வந்துள்ளமை காண்க. இவ்வகரம்
இசைநிறை என்று பரிமேலழகர் கூறியுள்ளனர். இப் பரிபாடலின்கண்
பிறாண்டும் பற்பல சொற்கள் இங்ஙனமே வந்துள்ளன; அவையிற்றை
உணர்ந்து கடைப்பிடிக்க.

62 - 65: காமரு..................................தொழுதே

      (இ - ள்.) ஏம் உறு நெஞ்சத்தேம் யாம் - இன்பமுறுகின்ற
நெஞ்சையுடையேமாகிய யாங்கள், காமரு சுற்றமொடு - யாங்கள்
" விரும்புகின்ற எம் சுற்றத்தாரோடு, வாய்மொழிப்புலவ நின் அடியுறை
ஒருங்கு இயைந்து ஒன்றுபு - வேதத்தை அருளிச்செய்த வித்தகனே!
நினது திருவடியாகிய புகலிடத்தின்கண்ணே ஒரு சேரக் கூடிப் பொருந்தி
நின்று, நின் தாள்நிழல் தொழுது - நினது திருவடி நிழலைக் கைகுவித்துக்
கும்பிட்டு, வைகலும் பொலிகெனப் பரவுதும் - என்றென்றும் அத் திருவடி
விளங்குவதாக என்று வாழ்த்துவேம்.