வங்கியம். முழவு - மத்தளம்.
மன்மகளிர் - அரசனாலே தலைக்கோல்
அளிக்கப்பட்ட கூத்தியர். சென்னியர் - பாணர்: ஆடல் கூறவே பாடல்
கூறவேண்டாவாயிற்று கரைபொரு திழிபுனல் என்க. பொற்பு - அழகு:
ஈண்டுத் தன்மை என்பதுபட நின்றது. ஆடல் தொடங்க உண்டாகிய
முழக்கமும் புனல் இழி முழக்கமும் கூடி, இடியோடு முழங்கும் முகில்
முழக்கின் பொற்புடைத்தாயிற்று என்க.
திருமருத முன்றுறை - மதுரையிடத்தே வையையின்கண்
ஆடுதுறையுள் ஒன்று. புனற்கண் துய்ப்பார் - நீராடி இன்புறுவோர்.
தாமம் - மாலை. பேஎம் - அச்சம். வையை: அண்மைவிளி; என்றும்
படிந்து என இருசொல் வருவித்துக் கூறுக. விடிவுற்று - துன்பம்
அகலப்பெற்று. விடிய மாட்டான், அவனுக்கு விடிந்தது, அவன் என்றும்
விடியான் என இன்றும் வழங்கும் உலகவழக்கும்' உணர்க. ஏமாக்க:
வியங்கோள் வினைமுற்று; தன்மைக்கண் வந்தது. பயம் - பயன். பயம்
என்பதனை நீங்காமையின் பின்னரும் ஒட்டுக.
(பரிமே.) 84. பேஎநீர் - ஆழத்தான் அச்சத்தைத்
தரும் நீர்.
85: விடிவுறுதல் - துன்பம் நீங்கி இன்பமாதல்.
85. 'ஏமாக்க' என்னும் வியங்கோள் வேண்டிக் கோடற்
பொருட்டாகலின் தன்மைக்கண் வந்தது.
என்பது....................................பெறுக யாமென்றது.
இதன் பொழிப்பு:-வையைப் புதுநீரின்கண் தலைவன்
தலைமகளோடு சென்று நீராடினான் என்று கேட்டு மகிழ்ந்த செவிலி
தோழியை அந் நீராட்டின்பம் எவ்வாறிருந்தது எனக்குச் சொல் என்று
கேட்பத்தோழி, அந் நீராட்டின்பமும் தலைவன் தலைவியின்பாற்
கொண்டுள்ளதாதற் சிறப்பும் செவிலிக்குக் கூறியதாக இப்பாடல்
அமைந்துள்ளது என்றவாறு. |
|
|
|