பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்113

கருதி அவளை நோக்கி, திருப்பரங்குன்றம் களவுப் புணர்ச்சியையும்
இடைவிடாதமைந்த நல்ல புணர்ச்சியையும் தரும் சிறப்புடையது என்றான்;

      47-50: அதுகேட்ட தலைவி புலந்து கூறுகின்றாள்; ஏடா!
இப்பொழுது நின்மேனியில் அயல் மகளிர் மேலுள்ள மணங்கமழா
நின்றது. அவரைக் கூடுதற்பொருட்டே நீ காலையில் என்னைப் பிரிந்து
சென்று மாலைதோறும் இங்கே வருகின்றாய். ஆதலின், நீ பண்டு
எனக்குச் செய்த சூண்மொழியைத் தவிர்வாயாக;

      51-55: அதுகேட்ட தலைவன் கூறுகின்றான்; மலருண்கண்ணாய்!
இவ்வையையிலுள்ள இரும்பொழிலாணை! பரங்குன்றத்துச் சாரலாணை!
பார்ப்பார் ஆணை! அச்சொல் எனக்குப் பொருந்துவதன்று! இம்மணம்
திருப்பரங்குன்றத்துள்ள கனியினும் மலரினும் பயின்றுவந்த காற்று
என்மேல் வீசியதனால் உண்டாயது. ஆதலால் நீ வருந்தாதேகொள்.
இங்ஙனம் சூளுற்ற தலைவன் குறிப்பை நோக்கி, ஏடா! நின் சூளை
விடு என்றாள் தலைவி;

      55 - 62: மேல் இவ்வுரையாடலைக் கேட்டுநின்ற தோழி
தலைவனை நோக்கி: ஏடா! சூளுறாதே! நில்லு! நில்லு! யான் கூறுவது
கேட்டபின் சூளுறுக. தகுதியில்லாத மகனே! நீ இடும் ஆணையாலே
இவட்கு ஏதம் வரும். இவளோ ஒரு தாய்க்கு ஒரு பெண் என்றாள்.
அதுகேட்ட தலைவன் அப்படியா! இவள் அங்ஙனம் அருமகளோ!
யான் அஃதறிந்திலேன்! என்று கூறிப் பின்னும், இதோ பார், வையை
மணலைத் தொடுகின்றேன்; திருப்பரங்குன்றத்தின் அடியைத்
தொடுகின்றேன்; என்று சூண் மொழிந்தான்;

      62 - 71: அதுகேட்ட தோழி ஏடா! நீ இவ்வாறு ஆணையிடின்
அம் முருகனைச் சார்ந்த அணங்கும், அவன் வேற்படையும், உன்னை
வருத்தாநிற்கும் பார்ப்பாருடைய அடிதொட்டு ஆணையிடினும் இடலாம்.
அம் முருகவேளின் மயிலையும் வேலையும் நோக்கி ஆணையிடாதே!
ஏடா! வள்ளிமேலும் ஆணையிடுகின்றாய் இனி அங்ஙனம் செய்யாதே.
அங்ஙனமே வையை மணலையும், திருப்பரங்குன்றத்தையும் கூறி
ஆணையிடாதே என்றாள்;

      72 - 82: மேல், தலைவன் கூறுகின்றான்; நேரிழாய்! யாம்
இருதலைப் புள்ளின் ஓருயிரனையேம் ஆகலின், எமக்குள் யார்
பிரிவது! யார் தருவது! யார் வினவுவது! யார் விடை யிறுப்பது! பிரிவும்
வரவும் வினாவும் விடையும் எமக்குள் எவ்வாறு உண்டாகும். நீ இது
நினையாமல் 'நின் ஆணை கொடி

ப.--8