யது' என்கின்றாய். இத் தலைவி
என்மேலேற்றிக் கூறிய குற்றம்,
கனவுமன்று நனவுமன்று வெறும் பொய்யே. நான் இட்டது
பொய்யாணையாயின் அது குறித்து இறைவன் என்னை ஒறுப்பான்
எனின், இறைவன் அவ்வாறு செய்யாமல் இருத்தற்பொருட்டு ஏடி! தோழி
நீயே சென்று அவனடியை வணங்கி, அவன் சினத்தை ஆற்றுவாயாக
ஏவலிளையர்களே! இவ்வுரையை எல்லோர்க்கும் அறிவியுங்கள்; நாம்
எல்லோரும் திருப்பரங்குன்றத்தே சென்று மலர் தூவுவோம்; அவியை
ஊட்டுவோம்; பாடுவோம்; கிணையை முழக்குவோம்;
83 - 89; இங்ஙனம் தலைவன் கூறக்கேட்ட தோழி ஏடா!
என்னை நின் சூண்மொழிக்குச் சாந்திசெய்யச் செல்க என்றாய்;
இதனாலே நின் சூள் பொய்ச்சூள் என்பதும், அதனால் வரும் ஏதம்
நின்னைக் கவரும் என்பதும் அறிந்துகொண்டேன். நின்சூளானே
முருகப்பெருமான் வேறுபடுமுன்பே இத்தலைவியே சென்று முருக
வேளை வணங்கி நின்சூளால் வரும் துன்பத்தை ஆற்றுவாள். அவள்
அவ்வாறு செய்தலை நீயும் காண்பாயாக என்றாள். தோழி கூறியவாறே
தலைவியும் தன் கணவனுக்குத் துன்பம் வராதபடி முருகவேள்
அடிவணங்கி அப் பெருமான் சினத்தை ஆற்றுவித்தாள்.
90 - 108: இவ்வாறே, மதுரையினின்று திருப்பரங்குன்றத்திற்குச்
செல்லும் வழியின்கண்ணே தலைமகளிர் திரளாகச் சென்று இறைவனை
வழிபடச் சந்தனமும், புகைத்தற்குரிய பொருளும், விளக்கமும், மலர்களும்,
முழவும், மணியும், கயிறும், மயிலும், குடாரியும், பிணிமுகமும் ஆகிய
இவற்றையும், இன்னோரன்ன பிறபொருள்களையும் ஏந்திச்சென்று
குன்றத்தை எய்தித் தொழுவோரும், வரங்கொள்வோரும் 'வயிறு
கருவுறுக! என வேண்டுவோரும், எங்கணவர்க்குச் செய்பொருள்
வாய்க்க! என வேண்டுவோரும், 'எங்கணவர் போரின்கண் வெல்க!
என வேண்டுவோரும் ஆகி, வழிபட்டனர்;
109 - 123: ஆடுவோர் கொட்டும், தாளவொலியும்,
பாடுவோர்
ஒலியும், குன்றத்தின் எதிரொலியும், கூடுதலாலே பெருமுழக்கம்
உண்டாயிற்று. மகளிரும் மைந்தரும் சுனையாடுங்கால் அவர்தம்
அணிகலன்கள் மயங்கின. பின்னர்க் காமபானத்தையும் அடிசிலையும்
உண்டு தலைமகளிர் தத்தம் கணவன்மாராலே வந்த சோர்வினின்றும்
நீங்கினர்;
124 - 130: திருப்பரங்குன்றமே! இவ்வாறாகத் தலைவரும்
தலைவியரும், வரம் வேண்டும் பிறரும் கூடி, கறைமிடற்றண்ணலும்,
மாசிலா இறைவியும் ஈன்றளித்த கடம்பமர் செல்வன் திருக்கோயிலை
என்றென்றும் வழிபட்டு நிற்ப, மண்வருந்த மழை |
|
|
|