வறந்ததாயினும் நெறிநீர் அருவி
மிக்குப் பெருகும் செல்வம்
நினக்கு நிலைபெறுவதாக.
மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும்
5 மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும் (5)
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும்
யாவரும் பிறரு மமரரு மவுணரும்
மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்
10 பற்றா கின்றுநின் காரண மாகப் (10)
பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும்
இமயக் குன்றினிற் சிறந்து
நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை
மின்னீன்ற விளங்கிணரூழா
15 ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் (15)
அருவிதாழ் மாலைச் சுனை;
முதல்வநின் யானை முழக்கங் கேட்ட
கதியிற்றே காரின் குரல்;
குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ
20 மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப (20)
எதிர்குதிர் ஆகின் றதிர்ப்பு மலைமுழை
ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்னவினம்
வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்பச் சுனைமலர்க்
கொன்றை கொடியிண ரூழ்ப்பக் கொடிமலர்
25 மன்றல மலர மலர்காந்தள் வாய்நாற (25)
நன்றவிழ் பன்மலர் நால நறைபனிப்பத்
தென்ற லசைவரூஉஞ் செம்மற்றே யம்மநின்
குன்றத்தாற் கூடல் வரவு;
குன்ற முடைத்த வொளிர்வேலோய் கூடல்
30 மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்பெழக் (30)
காலொடு மயங்கிய கலிழ்கடலென
மால்கடல் குடிக்கு மழைக்குரலென
|
|