விறல்வெய்யோ ணூர்மயில் வேனிழ னோக்கி
அறவ ரடிதொடினும் ஆங்கவை சூளேல்
குறவன் மகளாணை கூறேலா கூறேல்
70 ஐய சூளின் அடிதொடு குன்றொடு
வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல்
யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு
நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய்
கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை
75 நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல்
முகைமுல்லை வென்றெழின் முத்தேய்க்கும் வெண்பல்
நகைசான்ற கனவன்று நனவன்று நவின்றதை
இடுதுனி கையாறா வெற்றுயர் கூரச்
சுடுமிறை யாற்றிசி னடிசேர்ந்து சாற்றுமன்
80 மிக, ஏற்றுதுமல ரூட்டுது மவி
தேற்றுதும் பாணி எழுதுங் கிணைமுருகன்
தாட்டொழு தண்பரங் குன்று;
தெரியிழாய் செல்கென்றாய் எல்லாயாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யாநின் வாயில்சூள் வௌவல்
85 பருவத்துப் பன்மாணீ சேறலிற் காண்டை
எருமை யிருந்தோட்டி எள்ளீயும் காளை
செருவஞ் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி
அருள்வயினாற் றாங்கு மணிகையாற் றாக்கி
நிரைவளை ஆற்றிருஞ் சூள்;
90 வளிபொரு சேட்சிமை வரையகத்தால்
தளிபெருகுந் தண்சினைய
பொழில்கொளக் குறையாமலரக்
குளிர்பொய்கை யளறுநிறைய
மருதநளி மணன்ஞெமர்ந்த
95 நனிமலர்ப் பெருவழிச்
சீறடியவர் சாறுகொள வெழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்
நாறுகமழ் வீயும் கூறுமிசை முழவமும்
100 மணியுங் கயிறு மயிலுங் குடாரியும்
|
|
|
|