குரிய தலைவனாகிய சிவபெருமான்
என்க. அவன் பெயர், உருத்திரன்
என்பது. நாதர் - தலைவர். மேவரும் - உணர்தல் அரிய என்க.
முதுமொழி - வேதம். விழுத்தவம் - சிறந்த தவம். பற்று - உறையுமிடம்.
ஆகின்று - ஆகாநின்றது.
(பரிமே.) 2. புங்கவம் - ஏறு.
4. உலகின்கண் இருள்.
6-7. ஆதிரை முதல்வன் பெயராற் சொல்லப்பட்ட நாதர்
உருத்திரர்.
11. அவர் பழைய இடமாகிய இமயக் குன்றத்தை ஒக்கும்.
12 - 16: இமய..............................சுனை
(இ - ள்.) நின் குன்றின் அருவிதாழ் மாலைச் சுனை
-
பெருமானே! நினது திருப்பரங்குன்றின்கண் அருவிநீர் தங்கும் நிரல்பட்ட
சுனை, இமயக் குன்றினிற் சிறந்து - அவ்விமய மலையின் கண்ணுள்ள
ஏனைச் சுனைகளினுங் காட்டிற் சிறப்பு எய்தி, நின் ஈன்ற நிரையிதழ்த்
தாமரை மின் ஈன்ற விளங்கு இணர்ஊழா - நின்னை ஈனுதற்கு இடமான
நிரைத்த இதழ்களையுடைய தாமரையினது மின்னல்போல விளங்கும்
இதழ்த் தொகுதி என்றும் உதிராத தெய்வத் தன்மையுடைய, ஒரு நிலைப்
பொய்கையோடு ஒக்கும் - வற்றாமல் என்றும் ஒரே நிலையில் இருக்கும்
சரவணப் பொய்கையை ஒக்கும்;
(வி - ம்.) இமயக்குன்றினில் உள்ள ஏனைச் சுனைகளினுங்
காட்டிற் சிறப் பெய்தி என்க. 'நின்னீன்ற' என்பது அதற்குக் குறிப்
பேதுவாய் நின்றது. இணர். ஈண்டு இதழின் தொகுதி. அருவிதாழ் -
அருவி தங்கும் சுனை' என்பர் பரிமேலழகர். மாலை - ஒழுங்கும்.
17 - 21: நின்யானை.............................மலைமுழை
(இ - ள்.) நின் யானை முழக்கம் காரின் குரல்கேட்ட
கதியிற்று -
பெருமானே! நின் ஊர்தியாகிய யானையினது பிளிற்றொலி முழக்கம்
முகிலினது இடிக்குரல் கேட்ட தன்மைத்து, குரல் கேட்ட கோழி குன்று
அதிரக் கூவ - அவ்வியானையினது முழக்கங்கேட்ட நினது
கோழிச்சேவல் வெருவிக் குன்றம் அதிரும்படி கூவாநிற்றலானும், நனிமத
வாரணம் மாறு மாறு அதிர்ப்ப - அக் கோழியின் கூக்குரல்
கேட்குந்தோறும் மிக்க மதத்தையுடைய நினது யானையும்
பிளிறாநிற்றலானும், மலைமுழை அதிர்ப்பு எதிர்குதிர் ஆகின்று -
திருப்பரங்குன்றத்தின் முழையின்கண் எழுகின்ற எதிரொலி அவ்
வொலிகளுக்கு மறுதலையாகா நின்றது; |
|
|
|