நின் குன்றினின்றும் கூடலுக்குச்
செல்லும்வழி செம்மற்று என முடிக்க.
(பரிமே) 22. எழுதுளையான வங்கியத்தும் ஐந்து துளையான
வங்கியத்தும் யாழினும் பிறந்த இசைச்சுருதி யொத்து.
28. நின் குன்றத்தொடு கூடலிடைவழி.
29 - 35: கூடல்...............................குமுறியவுரை
(இ - ள்.) கூடல் மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பு
எழ -
மதுரையின்கண் மணம் பொருந்திய மணிநிறமுடைய முரசத்தின் முழக்கம்
எழுந்ததாக, மன்றல் - அந்த மணமுரசம், காலொடு மயங்கிய கலிழ் கடல்
என - காற்றால் ஏறுண்ட புடை பெயர்ச்சியையுடைய கடல் போலவும்,
மால் கடல் குடிக்கும் மழைக் குரல் என - காற்றானே மயங்கும்
அக் கடல்நீரைப் பருகாநின்ற முகிலினது முழக்கம் போலவும், இந்திரன்
ஏறு அதிர்க்கும் இரும் உரும் என் - இந்திரனுடைய இடியேறு முழக்கும்
பெரிய இடிமுழக்கம் போலவும், அதிர அதிர - முழங்குந்தோறும்
முழங்குந் தோறும், நின் குன்றம் குமுறிய உரை - நின்னுடைய
திருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம், மாறுமாறு அதிர்க்கும் -
அம் முழக்கத்திற்கு மாறுமாறாக முழங்கா நிற்கும்.
(வி - ம்.) கூடல் - மதுரை. மன்றல் - மணம். மணிமுரசு
- மணி
போன்ற நிறமுடைய முரசம் என்க கால் - காற்று. கலிழ்கடல் -
புடைபெயர்ச்சியுடைய கடல். மால் - மயக்கம். மழை - முகில்.
இந்திரனுடைய இடிஏறு என்க. மன்றல். முரசிற்கு ஆகுபெயர்.
மாறுமாறு-எதிரெதிராக. குமுறிய - முழங்கிய. உரை - முழக்கம்.
இதுகாறும் முருகவேளை எதிர்முகமாக்கி வாழ்த்தியது.
(பரிமே.) 35. முழக்கம் மலைக்கு வார்த்தை போறலின்
'உரை'
எனப்பட்டது.
36 - 46: தூதேய...............................குன்று
(இ - ள்.) தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு - தலைவியரானே
தூதாக விடப்பட்டுத் தலைவர்களோடே மீண்ட வண்டுக்கூட்டத்தினது
இசை, அவர் காதல் மதில் மூதூர் கம்பலைத்தன்று - அத் தலைவியரின்
காதற் பெருக்கத்தை மதிலையுடைய பழைமை பொருந்திய மதுரைக்கண்
உள்ளார் அறிந்து கொள்ளற்குக் காரணமானதோர் ஆரவாரமாயிற்று,
(அங்ஙனம் வண்டு தூதுரைப்ப வந்த தலைவருள் ஒருவன் தலைவியை
நோக்கி) தண்பரங்குன்று - என் அன்பே! குளிர்ந்த திருப்பரங்குன்று,
வடுவகிர் வென்ற கண் மாந்தளிர் மேனி நெடுமென்பணைத்தோள்
குறுந்தொடி மகளிர் - மாவடுவின் பிளப்பினை |
|
|
|