னாலேயே யாவரிடத்தும் பொய்கூறாத
நின்னுடைய மெய்ம்மை யில்லாத
சூளானே வரும் துன்பம் நின்னை வௌவிக்கொள்ளும் என்பதனை
யாங்கள் அறிந்துகொண்டோம், எருமை இருந்தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்குமுன்னே - கூற்றுவனுடைய பெரிய ஆணையினையும்
இகழும் ஆற்றலுடைய முருகப் பெருமான் நின் பொய்ச்சூளானே
மாறுபடுதற்கு முன்னரே, நிரைவளை - நிரைத்த வளையலையணிந்த
தலைவியே அப் பெருமான் அடிக்கண் சென்று, கையால் தூங்கு மணி
தாக்கி - தனது கையாலேயே அவன் திருக்கோயிலிலே தூங்காநின்ற
மணியை அடித்து, தன் சென்னி - தனது தலையாலே அவன்
திருவடிகளை வணங்கி, இருஞ்சூள் - நினது கடிய சூளானே வரும்
துன்பத்தை நினக்கு வாராதபடி செய்யும்பொருட்டு, அருள்வயினான்
ஆற்று - அப் பெருமானுடைய சினத்தை அவனது திருவருட் கூற்றை
வழிபடுமாற்றானே ஆற்றுவிக்கும் காட்சியை, நீ பருவத்துப் பன்மாண்
சேறலின் காண்டை - நீ பரத்தையரைப் புணர்தற்குரிய பருவத்தில்
பலகாலும் அத் திருப்பரங்குன்றத்திற்குச் செல்லுதலுண்மையானே
காண்பாய்;
(வி-ம்.) நீயே கழுவாய் செய்ய ஏவுதலானே நினது சூள்
பொய்ச்
சூள் என்பது எம்மால் அறிந்து கொள்ளப்பட்டது என்றவாறு
'ஒருவர்க்கும் பொய்யாநின்' என்றது. இகழ்ச்சிக் குறிப்பு. பொய்க்கலாகா
இறைவனிடத்தும் பொய் கூறுபவன் என்பது கருத்து. யாம் என்றது,
தலைவியை உளப்படுத்தியது. வாயில் உண்மையில்லாத வௌவல்
பற்றிக்கோடல். பருவம் - பரத்தையரைப் புணரும் பருவம். பன்மாண்
- பலகாலும். சேறலின் - செல்லும் வழக்கமுடைமையின். காண்டை -
காண்பாய். எருமை: ஆகுபெயராய்க் கூற்றவனுக்கு ஆயிற்று. தோட்டி
- ஆணை. எள்ளீயும் - எள்ளும்: இகழும். காளை: முருகப்பெருமான்.
செருவஞ் செய்தல் -பகைமை செய்தல். சென்னியான் வணங்கி என
வருவித்துக் கூறுக அருள்வயின் அப் பெருமானுடைய தெறலும்
அளியுமாகிய இரு கூற்றினுள் அருட்கூற்றினை வழிபடுமாற்றானே என்க.
ஆற்று - ஆற்றுதல்.
கற்புக் கடம்பூண்ட தலைவி நீ கூறாமலே நினது சூளான்
வரும்
ஏதத்தை இறைவனை வணங்கி அகற்றுவாள்; அவ்வாறு செய்தலை நீயே
காண்பாய் என்றவாறு. நிரைவளை: அன்மொழித்தொகை. இருஞ்சூள்
- கடுஞ்சூள்; பொய்ச்சூள் என்றவாறு.
(பரிமே.) என்றது, யான் ஆற்றவேண்டா; அவள் தானே
ஆற்றுமெனத் தலைமகள் கற்புடைமை கூறியவாறு.
84. 'ஒருவர்க்கும் பொய்யாநின்' என்றது, குறிப்புமொழி.
(மேலே) கணவற்கு வரும் ஏதமஞ்சிச் செய்தலால் தம்
கற்பிற்கும்........ தலைமகளிர் யாவரும் இத்தன்மைய செய்வரென
அவரது செய்தி கூறுகின்றார்.
(இவ்வாறு தலைவன் தலைவி தோழி என்பவர்களின் கூற்றில்
வைத்துத் திருப்பரங்குன்றத்தின் சிறப்பினை ஓதிவந்த புலவர், இனிக்
|
|
|
|