(வி - ம்.) அமிர்தபானம் - அமிர்தம் போன்ற காமபானம்.
உரிமை மாக்கள் - சமைத்தற் றொழிலுரிமைபூண்ட மடையர். அவிச்
சுவையே தேர்வாராகலின் 'மாக்கள்' என்றார்.
மைந்தர் மார்வம் வழிவந்த - தலைவர் மார்பம்
தம்மைப்
பிரிந்தமை காரணமாக வந்த செல்லல் என்க. செல்லல் - துன்பம்.
"செல்லல் இன்னல் இன்னாமையே." (தொல். உரி. 6)
(பரிமே.) 119. 'கலவ' என்பது கலவி என நின்றது.
சீறடியவர் சாறுகொளப் பெருவழியிடத்து எழுந்து பிறவும்
ஏந்தி
வரையகத்துச் சென்று தொழுது கம்பலைக்கண்ணே மார்பணி கலக்க
உவமையமிர்து உய்ப்ப வரங்கொள்வோரும் கடம்படுவோரும் செவி
சார்த்துவோரும் அருச்சிப்போருமாய்ச் செல்லல் தீர்ப்ப எனக் கூட்டுக.
124 - 130: எனவாங்கு . . . . . . . நினக்கு
(இ - ள்.) என ஆங்கு - என்று இவ்வாற்றால், தண்பரங்குன்றம்
-
குளிர்ந்த திருப்பரங்குன்றமே, உடம்புணர் காதலரும் அல்லாரும் கூடி
- தம்முள் பிரியாது கூடி மகிழும் காதலையுடைய மகளிரும் மைந்தரும்
அவரல்லாத வரம் வேண்டுவோரும் கடம்படுவோரும்
அருச்சிப்போருமாகிய ஏனையோரும் ஒருங்கே குழுமி, மறுமிடற்று
அண்ணற்கு மாசு இலோள் தந்த கடம்பு அமர் செல்வன் கடிநகர் பேண
- நஞ்சாகிய கறையினையுடைய மிடற்றினையுடைய தலைவனாகிய
சிவபெருமானுக்குக் குற்றமில்லாத உமாதேவியார் ஈன்ற கடம்பின்கண்
விரும்பி உறையும் செவ்வேளினது காவலையுடைய திருக்கோயிலை
இன்றே போல என்றென்றும் விழிபடும்படி, மண்பரிய வானம் வறப்பினும்
- இம் மண்ணுலகத்தில் வாழும் உயிர்கள் வருந்தும்படி மழை வறந்து
போயினும்; நினக்கு நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் மன்னுகமா
- நெறிப்படுத்தி ஒழுகும் அருவி இடையறாது ஒழுகுவதாகிய பெரிய
செல்வம் நினக்கு என்றென்றும் நிலைபெறுவதாக.
(வி - ம்.) அல்லார் - முற்கூறப்பட்ட வரங்கொள்வோர்
முதலிய
பிறர். கடம்பமர் செல்வன் - முருகப்பெருமான். நகர் - திருக்கோயில்.
மறு - நஞ்சாகிய கறை. மறுமிடற்று அண்ணல்: சிவபெருமான்.
மாசிலோள்- உமை. (நிமலை; விமலை) அசும்புதல் -
இடையறாதொழுகுதல் மண்; ஆகுபெயர். வானம்: ஆகுபெயர்;
மன்னுகமா என்புழி 'மா' வியங்கோளசைச் சொல்.
(பரிமே.) முருகற்கு இடமாகிய பரங்குன்றை வருணித்த
முகத்தால்
எதிர்முகமாக்கியும் படர்க்கையாக்கியும் அவனையே வாழ்த்தி
முடித்தமையின் 'கடவுள்வாழ்த்தாயிற்று.' |
|
|
|