பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்135

ஒன்பதாம் பாடல்
----------

செவ்வேள்

பொருட் சுருக்கம்

      1 - 11: இமய மலையின் சிகரத்தில் கார்த்திகை மகளிர்
அறுவரிடத்தே மணிமிடற் றண்ணலாகிய சிவபெருமானுக்கு
மகனாகப் பிறந்தபெருமானே! நீ வள்ளியைக் களவின்கண் மணந்த அன்று,
தேவசேனையின்கண் முதுவேனில் கார்ப்பருவமாகும்படி முகில்மழை
பெய்தாற்போலத் திருப்பரங்குன்றின் கண் நீராகிய மழையைப் பெய்தது.

      12 - 20: நான்மறைப் பொருளை விரித்து, அம் மறையினது நல்ல
இசையை விளக்கும் புலவீர்! சிறந்ததொரு பொருளை யாங் கூறுவேம்
கேளுங்கள்! காமத்திற் சிறந்தது காதலையுடைய களவுக் காமம். அதுதான்
மெய்யுற்றறியார் இருவர் அன்பொத்து ஊழ்வகையானே தாமே மெய்யுற்றுப்
புணரும் புணர்ச்சி; இனி அன்பொவ்வாத கற்பென்னும் ஒழுக்கம்
புலத்தலாற் சிறந்தது. அப் புலவிதானும் தலைவனுடைய பரத்தமையால்
நிகழ்வதாம். மேலும், தலைவன் சென்றுள்ள பரத்தை இல்லிற்குத் தலைவி
தன் தோழியைச் செவ்வணி யணிந்து விட்டுத் தன் பூப்பை அறிவிக்க,
அதனால் தலைவன் வந்து உவக்கும் புணர்ச்சியை உடையது அக்
கற்பொழுக்கம்.

      20 - 27: அப் புணர்ச்சிகள் பரத்தையரானே பழி கூறப்படுவனவாம்.
மேலும் அப் புணர்ச்சியின்பம் இயல்பானன்றி ஊடலானே உண்டாவது
கற்பில் தலைவர் பிரிவின்றி அமையும் களவுப் புணர்ச்சியையுடைய மண தங்கணவரோடு ஊடுகின்ற குற்றமுடையர் அல்லர். இத்தகைய களவுப்
புணர்ச்சியைப் பாராட்டும் பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத
தலைவரே களவொழுக்கத்தை மேற்கொள்ளமாட்டார்.

      28 - 38: வையைப் புனல் கொண்டு வந்த சந்தனத்தின் புகை
சூழ்ந்த மார்பின்கண் முத்துமாலை அணி செய்ய முருகவேள்
தேவசேனையோடு அளவளாவச் சென்றார்; அவள் அவரைத் தொழுது,
'வஞ்சனே! நின்னை அறியாமல் நின் மயலில் அகப்பட்ட மகளிர், மழையை
எதிர் நோக்கி வருந்தும்