பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்137

சிறக்கவென்று நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டுகின்றோம்: அருள்
புரிவாயாக.
   இருநிலந் துளங்காமை வடவயி னிவந்தோங்கி
   அருநிலை யுயர்தெய்வத் தணங்குசால் தலைகாக்கும்
   உருமுச்சூழ் சேட்சிமை உயர்ந்தவர் உடம்பட
   எரிமலர்த் தாமரை இறைவீழ்த்த பெருவாரி
 5 விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத்
   தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
   மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்நீ
   மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண் மணந்தஞான்
   றையிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண்
10 மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத்
   தணிமழை தலையின்று தண்பரங் குன்று
   நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
   வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
   காதற் காமம் காமத்துச் சிறந்தது
15 விரும்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி
   புலத்தலிற் சிறந்தது கற்பே அதுதான்
   இரத்தலு மீதலு மிவையுள் ளீடாப்
   பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல்
   தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற
20 நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே
   கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை
   சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே, அதனால்
   அகறல் அறியா அணியிழை நல்லார்
   இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலரித்
25 தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார்
   கொள்ளாரிக் குன்றுப் பயன்
   ஊழாரத் 1தேய்கரை நூக்கிப் புனல்தந்த
   காழாரத் தம்புகை சுற்றிய தார்மார்பிற்
   கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ
30 வாழிய மாயாநின் தவறிலை எம்போலும்
   கேழிலார் மாணல முண்கோ திருவுடையார்

(பாடம்) 1. தோய்கரை.