மென்றோண்மை லல்கி நல்கலு மின்று
வையெயிற் றெய்யா மகளிர் திறமினிப்
பெய்ய வுழக்கு மழைக்காமற் றைய
35 கரையாவெந் நோக்கத்தாற் கைசுட்டிப் பெண்டின்
இகலி னிகந்தாளை யவ்வேள் தலைக்கண்ணி
திருந்தடி தோயத் திறைகொடுப் பானை
வருந்தல் எனவவற்கு மார்பளிப் பாளைக்
குறுகலென் றொள்ளிழை கோதைகோ லாக
40 இறுகிறுக யாத்துப் புடைப்ப
ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோ டேல
இருவர் வான்கிளி ஏற்பின் மழலை
செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந் தன்றே
வெறிகொண்டான் குன்றத்து வண்டு
45 தார்தார் பிணக்குவார் கண்ணியோச்சித் தடுமாறுவார்
மார்பணி கொங்கைவார் மத்திகையாப் புடைப்பார்
கோதை வரிப்பந்து கொண்டெறிவார்
பேதை மடநோக்கம் பிறிதாக வூத
நுடங்கு நொசிநுசுப்பார் நூழில் தலைக்கொள்ளக்
50 கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார்
வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார்
தேரணி மணிகயிறு தெரிபு வருவார்
வரிசிலை வளைய மார்புற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
55 தோள்வளை யாழி சுழற்றுவார்
மென்சீர் மயிலியலவர்
வாண்மிகு வயமொய்ம்பின்
வரையகலத்தவனை வானவன்மகள்
மாணெழின் மலருண்கண்
60 மடமொழியவ ருடன்சுற்றிக்
கடிசுனையுட் குளித்தாடுநரும்
அறையணிந்த அருஞ்சுனையான்
நறவுண் வண்டாய் நரம்புளர்நரும்
சிகைமயிலாய்த் தோகைவிரித் தாடுநரும
65 கோகுலமாய்க் கூவுநரும்
|
|