ஆகுல மாகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர்
வித்தகத் தும்பை விளைத்தலான் வென்வேலாற்
கொத்தன்று தண்பரங் குன்று
70 கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்தவேல்
அடும்போ ராளநின் குன்றின்மிசை
ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
75 அல்லாரை அல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்ச்
செம்மைப் புதுப்புனல்
தடாக மேற்ற தண்சுனைப் பாங்கர்ப்
படாகை நின்றன்று
மேஎ வெஃகினவை
80 வென்றுயர்த்த கொடி விறல்சான்றவை
கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர
வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா
நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை
85 பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே.
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார் இசை;
பண்ணுப் பாலையாழ்.
உரை
1 - 11: இருநிலம் . . . . . . . தண்பரங்குன்று
(இ - ள்.) இருநிலம் துளங்காமை வடவயின் நிவந்து
ஓங்கி -
பெரிய இம் மண்ணுலகம் அசையாமல் நிலைத்து நிற்கும் படியாக
வடதிசைக் கண்ணே மிகவும் உயர்ந்து, அருநிலை - ஏறுதற்கரிய
நிலைமையினை யுடையதும், அணங்குசால் உயர் தெய்வத் தலைகாக்கும்
- தீண்டி வருத்தும் தன்மை பொருந்திய உயர்ந்த பிறப்பினையுடைய
தெய்வங்கட்குத் தலைவ னாகிய இந்திரனாலே பாதுகாக்கப்படுவதும்
ஆகிய, உருமுச் சூழ் சேண் |