முருகவேள் வள்ளியைக் களவுமணம்
செய்த நாளில் அஃதறிந்த
தேவசேனையின் கண்கள் திருப்பரங்குன்றத்தின்கண் முகில்போல் நீரைப்
பொழிந்தது என்க.
(பரிமே.) 3. (உயர்ந்தவர்) தெய்வமுனிவர் அறுவரும்.
4 - 8. அயனால் வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையை
மலர்ந்து
விழும் பூவை ஒப்ப வேகந்தணியச் சடைப்பாரத்தின்கட் டாங்கிய
ஒப்பில்லாத நிலைமையினையுடைய சலதாரியாகிய மணிமிடற்றண்ணல்
என மேலே கூட்டுக.
6. சலதாரி - சலத்தைத் தரிக்கும் இயல்புடையவன்.
8. வள்ளியை "இமையுண்கண் மான்மறி" என்றார் மானுடை
மகள்
(பி-ம். மானுடமகள், மானிட மகள்) ஆகலின்.
இவ்வளவும் "முருகவேளை எதிர்முகமாக்கிக் கைகோள்"
(பி-ம்.
கைக்கோள்) இரண்டிற்குமுரிய தேவியராற் காதலிக்கப் பாடு கூறிவாழ்த்தி,
மேல் வள்ளியது சிறப்பும் அவன் பரங்குன்று அவட்கொத்தவாறும்
கூறலுறுவார், நான்மறைப் புலவரை நோக்கித் தமிழது சிறப்புக்
கூறுவாராய்ப் பொதுவகையான் அவற்றிற்குக் காரணங் கூறுகின்றார்.
12 - 15: நான்மறை...................................புணர்ச்சி
(இ - ள்.) நான்மறை விரித்து நல்இசை விளக்கும்
வாய் மொழிப்
புலவீர் - நான்கு வேதங்களையும் விரித்து ஓதி அவ்வேதங்களின் நல்ல
புகழை விளக்காநின்ற மெய்ம்மொழியினையுடைய புலவர்களே!, சிறந்தது
கேண்மின் - யாங்கூறுகின்ற சிறந்ததொரு பொருளைக் கேளுங்கள்,
காமத்துச் சிறந்தது காதல்காமம் - காமத்திலே சிறந்தது காதலையுடைய
காமமேயாகும், விருப்பு ஓர் ஒத்து மெய்யுறுபுணர்ச்சி - அஃதாவது பண்டு
மெய்யுற்று அறியாதார் இருவர் தம்முள் அன்பு ஒரு தன்மையாய் ஒத்து
ஊழ்வகையாலே தாமே தம்முள் தலைப்பட்டு மெய்யுற்றுப் புணரும்
புணர்ச்சியாகும்;
(வி - ம்.) நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
புலவீர் என்றது,
பொருளிலக்கணமமையாத வடமொழிப் புலவரை. வேதம் ஓதுங்கால்
அவற்றின் பொருள் புலப்பாட்டினும் ஓசை புலப்பாடே சிறந்து நிற்றலின்
'நல்லிசை விளக்கும் புலவீர்' என்றார் வாய்மொழி: வேதம்.
வேதத்திற்குரிய புலவீர் என்றவாறு. நுமது மொழியில் இச்சிறப்பு
இன்மையின் யாங்கூறுதும் கேண்மின் என்க.
காமம் - காமவொழுக்கம். காமத்துக் காதற்காமம்
சிறந்தது என
மாறுக. விருப்பு - அன்பு. ஓரொத்து - ஒருதன்மையானே ஒத்து.
காமங்களுள் வைத்துக் காதற்காமம் சிறந்ததென்க.
காதல் இல்லாத
காமமாவன, கைக்கிளையும் பெருந்திணையும் பொருட்பெண்டிர்
பொய்ம்மைமுயக்கமும் முதலியன என்க. இவற்றைக் காமக்காமம் |
|
|
|