என்ப. பொருளியலின்கண் இவற்றை
வேறுபிரித்துக் குறிஞ்சி முதலிய
காதற்காம வொழுக்கங்களையே சிறந்தனவாகக் கோடல் உணர்க.
(பரிமே.) 15. பான்மைவகையால் தாமே மெய்யுற்றுப்
புணரும் புணர்ச்சி.
16 - 22: புலத்தலின்....................................ஊடலுள்ளதுவே
(இ - ள்.) கற்பே புலத்தலின் சிறந்தது - இனிக்
காதற் காமத்தினும்
களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் முற்கூறப்பட்ட களவு நிற்க
எஞ்சிய கற்பு ஒழுக்கம் ஊடுதலானே சிறந்ததாகும், அதுதான் இரத்தலும்
ஈதலும் இவை உள்ளீடாப் பரத்தை உள்ளது - அவ் வூடல் தானும்
தலைவன் வாயில் வேண்டலும் தலைவி வாயினேர்தலும் இன்னோரன்ன
ஒழுக்கங்களும் உள்ளிட்ட தலைவனது பரத்தமை ஒழுக்கத்தானே
வருவதாகும், தோள் புதிது உண்ட பரத்தை இல்நாள் சிவப்புஉற
அணிந்து பண்புறு கழறல் உவக்கும் சுணங்கறையது - இனித்
தலைவனாலே புதிதாகத் தோள் நுகரப்பட்ட பரத்தையினது இல்லின்
கண்ணே அவன் இருக்கும்பொழுது தலைவி தன் தோழியருள் ஒருத்தியை
நாட்காலையிலே சிவந்த அணிகளாலே அணிசெய்து ஏவித் தன்
பூப்பினை அறிவிப்ப அப் பண்புறு கழறலானே தலைவன் வந்து உவக்கும்
புணர்ச்சியை உடைத்து, சுணங்கறை கேள் அணங்கு உறமனைக்கிளந்து
உள் - அப் புணர்ச்சிகள் தாமும் தலைவிக்குப் பாங்காயினார் கேட்டு
வருத்தமுறும்படி பரத்தையால் தன் வீட்டின் கண் அலர்
கூறப்பட்டுள்ளவாகும், சுணங்கறைப் பயனும் ஊடலுள்ளது -
அப் புணர்ச்சி யின்பந்தானும் களவுப்புணர்ச்சியின்பம் போல இயல்பாக
உளதாகாது ஊடுதலானே உண்டாவதாம்;
(வி - ம்.) புலத்தல் - ஊடுதல். கற்பு - கற்பொழுக்கம்.
அது -
அவ்வூடல். இரத்தல் - வாயில் வேண்டல். ஈதல் - வாயினேர்தல். இவை
என்றது - இன்னோ ரன்ன பிற வொழுக்கங்களும் என்றவாறு. அவை
"கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை
நெருங்கிக், காதலெங்கையர் காணி னன்றென, மாதர் சான்ற வகை"
முதலியன.
பரத்தை - பரத்தைமை ஒழுக்கம். பண்புறு கழறல் -
அறத்தொடு
பொருந்திய உறுதிச்சொல். நாள் - விடியற்காலை. நாள் சிவப்புற
அணிந்து என மாறுக. சுணங்கறை - புணர்ச்சி: சுணங்கறைப் பயன் -
புணர்ச்சியின்பம்: ஊடலுள்ளது என்றது, 'இயல்பான் உளதாகாது
ஊடலின்கண் உளதாவது' என்பதுபட நின்றது.
(பரிமே.) 16. அன்பு ஒவ்வாத கற்பு. |
|
|
|