18. பண்புறு கழறலாவது:- "பூப்பின் புறப்பா டீராறு நாளும்,
நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே" எனும் அறத்தொடு பொருந்திய
உறுதிச்சொல்.
22 - 26: அதனால்...............................பயன்
(இ - ள்.) அதனால் - இங்ஙனமிருத்தலால், அகறல்
அறியா அணி
இழை நல்லார் - இக் கற்பிற்போலத் தலைவர் நீங்குதல் அறியாத
களவுப்புணர்ச்சியையுடைய மகளிர், துனிக்கும் தவறு இலர் -
தந்தலைவரோடு மாறுகொண்டு ஊடுகின்ற குற்றம் உடையர் அல்லர்,
இத் தள்ளாப் பொருள் இயல்பின் தண்தமிழ் ஆய்வந்திலார் -
இக்களவுப் புணர்ச்சியே களவு கற்பென்னும் இரண்டனுள் வைத்தும்
சிறந்தது என்று பாராட்டுகின்ற குன்றாத பொருள் இலக்கணத்தை
உடைய குளிர்ந்த தமிழை ஆராயாத தலைவரே, குன்றுப் பயன் -
குறிஞ்சியின்கண் நிகழும் இன்பமாகிய இக்களவொழுக்கத்தை,
கொள்ளார் - மேற்கொள்ளார்;
(வி - ம்.) அகறல் - பிரிந்துபோதல்: அகறலறியா
அணியிழை
நல்லார்' என்றது. களவுப் புணர்ச்சியையுடைய தலைவியரைப் பிரிதலும்
ஊடலும் இல்லாமையால் கற்பினும் களவே சிறந்தது என்பது கருத்து.
இக்கருத்தினை,
"சிறப்பினாற் பெயர்பெற்றது களவியலென்பது - என்னை:
களவு
கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று
வேண்டும் இவ் வாசிரியன்" (இறையனார் களவியல் சூ. 1-உரை) என்றும்,
"இன்றமிழ் இயற்கை யின்பம்" (சீவக. 2063) என்றும் பிற சான்றோரும்
} ஓதுமாற்றானும் உணர்க.
தள்ளா - குன்றாத. பொருளியல்பின் தண்தமிழ் -
பொருளிலக்கணத்தையுடைய இனிய தமிழ்; குன்றுப் பயன் -
குன்றுதரும் பயன் என்க; அஃதாவது களவுப் புணர்ச்சியின்பம்.
மலையும் மலைசார்ந்த நிலனுமாகிய குறிஞ்சிநிலத்து ஒழுக்கமாகலின்
'குன்றுதரும் பயன்' என்றார்.
(பரிமே.) இனி அக் களவிற்புணர்ச்சியை உடைமையான்
வள்ளி
சிறந்தவாறும் அத் தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும்
கூறுகின்றார்.
27-36: ஊழாரத் . . . . . . . . . . .இகந்தாளை
(இ-ள்.) ஊழ் தேய்கரை ஆரம் நூக்கிப் புனல் தந்த
- முறை
முறையாகத் தேய்ந்தொழிந்த கரையின்மேல் நின்ற சந்தனமரத்தை
முறித்து வையை நீர் கொணர்ந்த, காழ் ஆரத்து அம்புகை சுற்றிய தார்
மார்பின் - வயிரமேறிய சந்தனக் கட்டையினது அழகிய புகை சூழ்ந்ததும்
மாலையினையுடையதுமாகிய மார்பின்கண், கேழ் ஆரம் பொற்ப
வருவானை - நிறம் பொருந்திய முத்துமாலை அழகுசெய்யாநிற்ப
வள்ளியின் பக்கல் |
|
|
|