(பரிமே.) 44. குன்றத்துவண்டென்றமையான், அது
வள்ளியுடைய தாயிற்று.
45 - 49: தார்தார்..........................நூழில் தலைக்கொள்ள
(இ - ள்.) ஊத நுடங்கும் நொசி நுசுப்பார் -
(அங்ஙனம் பாய்ந்ததனைக் கண்ட) வாயினால் ஊதாநின்ற காற்றினையும்
பொறாமல் வளையும் நுண்ணிதாகிய இடையினையுடையவராகிய
தேவசேனையின் தோழியர் அங்ஙனம் மெல்லியராயிருந்தும், பேதை
மட நோக்கம் பிறிது ஆக - தமது பேதைமையையுடைய மெல்லிய
நோக்கம் சினத்தாலே மாறுபடாநிற்ப, தார் தார் பிணக்குவார் -
வள்ளியின் தோழியருடைய மாலைகளோடு தம் மாலையை
வீசிப் பின்னுவர், கண்ணி ஓச்சித் தடுமாறுவார் - தமது தலையிலணிந்த
மாலைகளை எறிந்து சினத்தானே மனந்தடுமாறாநிற்பர், கோதை
வரிப்பந்து கொண்டு எறிவார் - தம் மாலைகளையும் வரியினையுடைய
பந்துகளையும் போர்ப்படையாகக் கொண்டு எறியாநிற்பர், மார்பு அணி
கொங்கை வார் மத்திகையாப் புடைப்பர் - மார்பினை அழகுசெய்யும்
தமது கொங்கையின்கண் இறுக்கிய கச்சினையே மத்திகையாகக்கொண்டு
புடையாநிற்பர், நூழில் தலைக்கொள்ள - இவ்வாறாக மிடைந்த
போரினை மேற் கொள்ளாநிற்ப;
(வி - ம்.) தார் - மார்பில் அணியும் மாலை. பிணக்குதல்
-
பின்னச் செய்தல். கண்ணி - தலையிற் சூடும் மாலை சினமிகுதியான்
மனந்தடுமாறாநிற்பர் என்க. மார்பிற்கு அணிசெய்யும் கொங்கையின்கண்
வார் என விரிக்க. மத்திகை - சம்மட்டி மத்திகையாக எனறபாலது
ஈறுகெட்டு நின்றது. வரிப்பந்து - வரியினையுடைய பந்து என்க.
மடநோக்கம் - மெல்லிய நோக்கம் என்க. சினத்தானே நோக்கம்
வேறுபட என்க. நொசி நுசுப்பு - நுணுகிய இடை. நூழில்
- மிடைதலுடைய போர்.
(பரிமே) 46. மார்பை அழகுசெய்த கொங்கைக் கண்.
49. ஊத நுடங்கும் நுசுப்பினராயிருந்தே மிடைந்த
போரை மேற்கொள்ள.
50 - 56: கயம்படு................................மயிலியலவர்
(இ - ள்.) (56) மென்சீர் மயிலியலவர் - இங்ஙனம்
தேவ
சேனையின் தோழியர் போரை மேற்கொண்டமை கண்ட வள்ளியின்
தோழியராகிய மெல்லிய தன்மையின்கண் மயிலை ஒத்தவர், கயம்படு
கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார் - தோட்டிப்புண்ணாலே
மென்மைப்பட்டதும் மதமணங்கமழ்வதுமாகிய தலையினையுடைய
களிற்றியானையினது தன்மையினைத் தம்பால் கொள்ளுவார், வயம்படு
பரிப்புரவி மார்க்கம் வருவார் - |
|
|
|