பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்147

வெற்றியை உண்டாக்குதற்குக் காரணமான செலவினையுடைய
குதிரைகளின் கதிகளை மேற்கொண்டு வாராநிற்பர், தேர் அணி
அணிகயிறு தெரிபு வருவார் - தேரினது வரிசை வருமாறு போல
வடிக்கயிற்றைத் தெரிந்துகொண்டு வாராநிற்பர், வாளிமார்பு உற வரிசிலை
வளைய வாங்குவார் - அம்புகள் தம் மார்பினைப் பொருந்தும்படி தமது
வரியப்பட்ட வில்லினை நன்கு வளையுமாறு வளைக்காநிற்பர், வாளிகள்
நிலைபெற மறலுவார் - வாட்படையினையுடைய போர்மறவர் தன்மை
தம்பாற் றோன்றும்படி சீறாநிற்பர். தோள்வளை ஆழி சுழற்றுவார் - தமது
தோளின்கண் அணியப்பட்ட வளையங்களையே ஆழிப்படையாகக்
கொண்டு அவற்றைச் சுழற்றாநிற்பர்;

      (வி - ம்.) கயம் - ஈண்டு மென்மைப்பண்பு குறித்து நின்றது;
"கயவென் கிளவி மென்மையும் செய்யும்" (உரி - 24.) என்பர்
தொல்காப்பியர். தோட்டிப் புண்ணால் மென்மைப்பட்ட என்க. மதம்
கமழ் சென்னி என்க. களிறு - ஆண்யானை. ஆண்யானையின்
இயல்பினை மேற்கொள்வார் என்க. கைம்மாறுதல்: ஒரு சொல்: தம்பாற்
கோடல். வயம் - வெற்றி. தேரணி - தேர்வரிசை. அணிகயிறு -
வடிக்கயிறு. அஃதாவது கடிவாளக்கயிறு. வாளி மார்புற என மாறுக.
மறலுதல் - சீறிப்பகைத்தல். ஆழி - சக்கரப்படை.

      மென்சீர் மயிலியலையுடைய வள்ளியின் தோழியர் களிற்றியானை
வருமாறும். புரவி வருமாறும், வடிக்கயிறு தெரிந்து தேரணி வருமாறும்,
வருவார் என்க.

      (பரிமே.) 50. தோட்டிப்புண்ணால் மென்மைப்பட்ட சென்னி.

      51. (பரிப்புரவி) செலவினையுடைய புரவிகள்.

      54. (வாளிகள்) வாளினை யுடையார்.

57 - 66: வாண்மிகு................................ஆகுல மாகுநரும்

      (இ - ள்.) வானவன் மகள் மாண் எழில் மலர் உண்கண்
மடமொழியவர் - வள்ளியின் தோழியர் செயல்கண்டு அஞ்சிய இந்திரன்
மகளாகிய தேவசேனையினது தோழியராகிய மாட்சிமை மிக்க அழகானே
தாமரை மலரை ஒத்த மையுண்ட கண்களையும் மடப்பமுடைய
மொழியினையும் உடைய மகளிர்கள், வாள்மிகு வயமொய்ம்பின் வரை
அகலத்தவனை உடன் சுற்றி - வாள் தழும்பு மிக்க
வெற்றியாற்றலையுடைய மலைபோன்ற மார்பினையுடைய முருகவேளை
ஒருங்கே கூடிச் சூழ்ந்துகொண்டு, கடி சுனையுள் குளித்து ஆடுநரும் -
மலர் மணங்கமழும் சுனையின்கண் பாய்ந்து முழுகி ஆடுவோரும்,
அறை அணிந்த அருஞ்சுனையான் - அப் பாறையினை. அழகுசெய்த
அரிய சுனையின்கண், நறவு உண்வண்டாய் - தேனை உண்ணும்