126-130: வையையாற்றின் வெள்ளத்தைக்
கண்டு விருந்துசெய்யும்
கூடலின்கண் குற்றமின்றி இசைக்கின்ற இசைக்குரிமையுடையவராகிய
பாணரும், கூத்தரும் மேவிய கூட்டத்தோடு ஒருங்கு ஏத்தித் தொழும்படி
வையையாறு புலவர்க்குப் பொன்னைச் சொரியும் வழுதியைப்போலவே
கழனிகளின்கண் பொன்னைப் பரப்பும் இயல்புவினை என்றென்றும்
மாறாது நிலை பெறுக.
மலைவரை மாலை அழிபெயல் காலைச்
செலவரை காணாக் கடறலைக் கூட
நிலவரை யல்ல னிழத்த விரிந்த
பலவுறு போர்வைப் பருமணன் மூஉய்
5 வரியரி யாணு முகிழ்விரி சினைய
மாந்தீந் தளிரொடு வாழையிலை மயக்கி
ஆய்ந்தளவா வோசை யறையூஉப் பறையறையப்
போந்தது வையைப் புனல்;
புனன்மண்டி யாடல் புரிவான் சனமண்டித்
10 தாளித நொய்ந்நூற் சரணத்தர் மேகலை
ஏணிப் படுகால் இறுகிறுகத் தாளிடீஇ
நெய்த்தோர் நிறவரக்கி னீரெக்கி யாவையும்
முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய்த் தத்திப்
புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்
15 மிகவரினு மீதினிய வேழப் பிணவும்
அகவரும் பாண்டியு மத்திரியு மாய்மாச்
சகடமுந் தண்டார் சிவிகையும் பண்ணி
வகைவகை யூழூழ் கதழ்புமூழ்த் தேறி
முதிய ரிளையர் முகைப்பரு வத்தர்
20 வதிமண வம்பலர் வாயவிழ்ந் தன்னார்
இருதிற மாந்தரு மின்னினி யோரும்
விரவுநரை யோரும் வெறுநரை யோரும்
பதிவத மாதர் பரத்தையர் பாங்கர்
அதிர்குரல் வித்தகர் ஆக்கிய தாள
25 விதிகூட் டியவிய மென்னடை போலப்
பதியெதிர் சென்று பரூஉக்கரை நண்ணி
நீரணி காண்போர் நிரைமாட மூர்குவோர்
|
|
|
|