பக்கம் எண் :

பரிபாடல்- வையை156

   பேரணி நிற்போர் பெரும்பூசல் தாக்குவோர்
   மாமலி யூர்வோர் வயப்பிடி யுந்துவோர்
30 வீமலி கான்யாற்றின் துருத்தி குறுகித்
   தாம்வீழ்வா ராகந் தழுவுவோர் தழுவெதிரா
   தியாமக் குறையூட லின்னசைத் தேனுகர்வோர்
   காமக் கணிச்சியாற் கையறவு வட்டித்துச்
   சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர்
35 தாம்வேண்டு காதற் கணவ ரெதிர்ப்படப்
   பூமேம்பா டுற்ற பனைசுரும்பிற் சேம
   மடநடைப் பாட்டியர்த் தப்பித் தடையிறந்து
   தாம்வேண்டும் பட்டின மெய்திக் கரைசேரும்
   ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார்போல்
40 யாம்வேண்டும் வையைப் புனலெதிர்கொள் கூடல்
   ஆங்க, அணிநிலை மாடத் தணிநின்ற பாங்காம்
   மடப்பிடி கண்டு வயக்கரிமா லுற்று
   நடத்த நடவாது நிற்ப மடப்பிடி
   அன்ன மனையாரோ டாயா நடைக்கரிமேற்
45 சென்மன மாலுறுப்பச் சென்றெழின் மாடத்துக்
   கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று
   மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புறச்
   செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதரக்
   கூங்கை மதமாகக் கொடுந்தோட்டி கைந்நீவி
50 நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து
   வாங்கி முயங்கி வயப்பிடி கால்கோத்துச்
   சிறந்தார் நடுக்கம் சிறத்தார் களையல்
   இதையுங் கயிறும் பிணையு மிரியச்
   சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும்
55 திசையறி நீகானும் போன்ம்;
   பருக்கோட்டி யாழ்ப்பக்கம் பாடலோ டாடல்
   அருப்ப மழிப்ப அழிந்தமனக் கோட்டையர்
   ஒன்றோ டிரண்டா முன்றேறார் வென்றியிற்
   பல்சன நாணிப் பதைபதைப்பு மன்னவர்
60 தண்ட மிரண்டும் தலைஇத்தாக்கி நின்றவை
   ஒன்றியு முடம்பா டொலியெழுதற் கஞ்சி