நின்ற நிகழ்ச்சியும் போன்ம்:
காமங் கனைந்தெழக் கண்ணின் களியெழ
ஊர்மன்னு மஞ்சி ஒளிப்பா ரவர்நிலை
65 கள்ளின் களியெழக் காத்தாங் கலரஞ்சி
உள்ள முளையெழ ஊக்கத்தா னுள்ளுள்
பரப்பி மதர்நடுங்கிப் பாரலர் தூற்றக்
கரப்பார் களிமதரும் போன்ம்;
கள்ளொடு காமம் கலந்து கரைவாங்கும்
70 வெள்ளந் தருமிப் புனல்
புனல்பொருது மெலிந்தார் திமில்விடக்
கனல்பொருத வகிலி னாவி காவெழ
நகின்முகடு மெழுகிய அளறுமடை திறந்து
திகைமுழுது கமழ முகிலகடு கழிமதியின்
75 உறைகழி வள்ளத் துறுநறவு வாக்குநர்
அரவுசெறி உவவுமதியென அங்கையிற் றாங்கி
எறிமகர வலய மணிதிகழ் நுதலியர்
மதியுணர மகளென வாம்பல்வாய் மடுப்ப
மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால்
80 வெண்டுகில் சூழ்ப்பக் குழன்முறுக் குநர்
செங்குங்குமச் செழுஞ்சேறு
பங்கஞ் செய்யகில் பலபளிதம்
மறுகு படவறை புரையறு குழவியின்
அவியம ரழலென வரைக்குநர்
85 நத்தொடு நள்ளி நடையிறவு வயவாளை
வித்தி யலையில் விளைக பொலிகென்பார்
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினைசெய்வார்
மண்ணார் மணியின் வணர்குரல் வண்டார்ப்பத்
90 தண்ணந் துவர்பல வூட்டிச் சலங்குடைவார்
எண்ணெய் கழல விழைதுகள் பிசைவார்
மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவா ரப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவா ரொண்டொடியார்
95 வண்ணந் தெளிர முகமும் வளர்முலைக்
|
|