கண்ணுங் கழியச் சிவந்தன வன்னவகை
ஆட்டயர்ந் தரிபடு மைவிரை மாண்பகழி
அரந்தின்வாய் போன்ம் போன்ம் போன்ம்
பின்னு மலர்க்கண் புனல்;
100 தண்டித் தண்டிற் றாய்ச்செல் வாரும்
கண்டற் றண்டாது திரைநுரை தூவாரும்
வெய்ய திமிலின் விரைபுனலோ டொய்வாரும்
மெய்ய துழவி னெதிர்புனன் மாறாடிப்
பைய விளையாடு வாருமென் பாவையர்
105 செய்தபூஞ் சிற்றடிசி லிட்டுண்ண வேற்பார்
இடுவார் மறுப்பார் சிறுகிடையார்
பந்துங் கழங்கும் பலகளவு கொண்டோடி
அந்தண் கரைநின்று பாய்வாராய் மைந்தர்
ஒளிறிலங் கெஃகொடு வாண்மா றுழக்கிக்
110 களிறுபோ ருற்ற களம்போல நாளும்
தெளிவின்று தீநீர்ப் புனல்;
மதிமாலை மாலிருள் கால்சீப்பக் கூடல்
வதிமாலை மாறுந் தொழிலாற் புதுமாலை
நாளணி நீக்கி நகைமாலைப் பூவேய்ந்து
115 தோளணி தோடு சுடரிழை நித்திலம்
பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல்
ஆடுவார் ஆடல் அமர்ந்தசீர்ப் பாணி
நல்ல கமழ்தே னளிவழக்க மெல்லாமும்
பண்டொடர் வண்டு பரியவெதிர் வந்தூதக்
120 கொண்டிய வண்டு கதுப்பின் குரலூதத்
தென்றிசை நோக்கித் திரிதர்வாய் மண்டுகாற் சார்வா
நளிர்மலைப் பூங்கொடித் தங்குபு கக்கும்
பனிவளர் ஆவியும் போன்ம் மணிமாடத்
துண்ணின்று தூய பனிநீ ருடன்கலந்து
125 காவிரி வாக்கும் புகை;
இலம்படு புலவர் ஏற்றகை ஞெமரப்
பொலஞ்சொரி வழுதியிற் புனலிறை பரப்பிச்
செய்யிற் பொலம்பரப்பும் செய்வினை ஓயற்க
வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல்
|
|