தலைக்கடல், கூட என மாறிக் கூட்டுக. நிழத்த - சுருங்க. "ஓய்தல்
ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயி னான்கும் உள்ளதன் நுணுக்கம்"
(உரி - 82) என்பர் தொல்காப்பியனார். அல்லல் என்றது. பசி முதலிய
துன்பங்களை என்க. விரிந்த - விரிந்தனவாகிய மலர்கள் என்க. உறுதல்
- நெருங்குதல். மூஉய் - மூடி; முதுவேனிற்பருவத்தே நீர்
வறந்துகிடந்தமை தோன்ற 'பருமணன் மூஉய்' என்றார்.
அரி - வண்டு. யாணு - அழகு; "யாணுக் கவினாகும்" (உரி
- 82)
என்பது தொல்காப்பியம். முகிழ் - அரும்பு. தீந்தளிர் - காட்சிக்கு இனிய
தளிர் என்க. பல்வேறு ஒலியும் ஒன்றுகூடி இசைத்தலின் ஆய்ந்து
அளவிடப்படாத ஓசை என்க. அறையூஉ - அறைய; செய்யூ என்னும்
வாய்பாட்டு வினையெச்சம். பறை - கரைகாவலரை அழைத்தற்குரிய பறை
என்க.
(பரிமே.) 1. ஈண்டு எல்லைப் பொருண்மைக்கண் வந்த
இறுதிக்கண்
ஆனுருபு தொக்கு நின்றது.
2. 'சென்று' என்பது செல்ல எனத் திரிந்தது.
6. 'மாந்தீந் தளிரொடு வாழைஇலை மயக்கி' என்றது
புனல்
கரையிற் சோலைகளுள் மரச்சினைகளைத் தோய்ந்து
செல்கின்றமை தோன்ற நின்றது.
9 - 18: புனல்மண்டி . . . . . . . . .மூழ்த்தேறி
(இ-ள்.) புனல்மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி -
அப் புதுநீரின்கண் புகுந்து ஆடுதலைச் செய்ய மாந்தர் செல்லுதற்
பொருட்டு, (தாளிதம் நொய்ந்நூல்?) சரணத்தர் - சரணத்தையுடையராய்,
மேகலை ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ - மேகலையாகிய
ஏணிப்படிகாலை மிக இறுகும்படி தாளிட்டுக் கொண்டு, நெய்த்தோர்
நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் - குருதியினது நிறம்போலும் சிவந்த
நிறத்தையுடைய அரக்கு நீரை எக்குதற்குரிய கருவிகள் எல்லாவற்றையும்,
முத்துநீர்ச் சாந்து அடைந்த மூஉய் - முத்துப்போன்ற நிறத்தையுடைய
பனிநீரோடு அளவிய சந்தனத்துடனே பெட்டியின்கண் கொண்டு, தத்திப்
புக அரும் பொங்கு உளைப் புள்ளியல் மாவும் - தாவுதலாலே
மேற்கொள்ளுதற்கரிய மிகுந்த பிடரிமயிரையும் பறவைபோன்ற விரைந்த
செலவினையும் உடைய குதிரையையும், மிக வரினும் மீது இனிய வேழப்
பிணவும் - மிகையாக நடப்பினும் மேற்கோடல் இனிதாகிய
பெண்யானையினையும், அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய்மாய்ச்
சகடமும் - பெயர் சொல்லி அழைக்கப்படுகின்ற அரிய எருதுபூண்ட
வண்டியினையும் கோவேறு கழுதையினையும் ஆராய்ந்து பூட்டப்பட்ட
குதிரைபூண்ட வண்டியினையும், தண்டு ஆர் சிவிகையும் வகை வகை
பண்ணி - காவுதற்குரிய தண்டுபொருந்திய சிவிகையினையும் பல்வேறு
வகையினும் அழகுசெய்து, ஊழ் ஊழ் கதழ்பு |
|
|
|