மலி - திரள். வயப்பிடி - வலிய பெண்யானை. உந்துவோர் -
செலுத்துவார். வீ - மலர். துருத்தி - யாற்றிடைக் குறை; (அரங்கம்.) தழுவு
- தழுவுதல். குறையூடல் - குறை கிடந்த ஊடல்; தீராமனின்ற ஊடல் -
'சிகைகிடந்த ஊடல்' (7-72.) என முன்னரும் வந்தமை காண்க: நசை -
விருப்பம். கணிச்சி - கோடரி.
" டைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு" (1251.)
எனவரும் திருக்குறளை நினைக. சேமம் - காவல். அமளி
- படுக்கை.
(பரிமே.) நீரினது அழகுகாண்டல் முதலாக அமளிசேர்தல்
ஈறாகச்
சொல்லிய விளையாட்டுக்கள் அலர்வாயவிழ்ந்தன்ன பருவத்துக் கற்புடை
மகளிர் பரத்தையரன; அவற்றில் மாவின்திரளை ஊர்தலும் பிடியை
உந்துதலும் பரத்தையர்க்கே உரிய.
(மாஊர்தல் பிடியூர்தலிரண்டும் பரத்தையர்க்கே உரியன;
ஏனைய
கற்புடைமகளிர்க்கும் பரத்தையர்க்கும் பொது என்றவாறு.)
35 - 40: தாம்வேண்டும் . . . . .. . . . . கூடல்
(இ-ள்.) புனை மேம்பாடு உற்ற கரும்பின் - அணிந்து
கொள்ளுதற்குரிய பூவினது மேம்பாட்டை விரும்பி அதன்கண் வந்து
பொருந்தாநின்ற வண்டுபோல, தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட
- ஏனை முகைப்பருவத்து மகளிரெல்லாம் தாம் விரும்பும் காதலையுடைய
கணவர் தம்மை விரும்பிவந்து எதிர்ப்பட்டுப் புணரும் பொருட்டு,
சேம மட நடைப் பாட்டியர் தப்பித் தடை இறந்து - தமக்குக் காவலாகிய
மெல்லிய நடையினையுடைய பாட்டியரைத் தப்பி அவர் தடுத்தலையும்
கடந்துபோய், தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏம் உறும்
நாவாய் வரவு எதிர் கொள்வார் போல் - தம்மால் விரும்பப்பட்ட
துறைமுகப் பட்டினத்தை அடைந்து அங்கிருந்து மீண்டுங் கரையைச்
சேராநின்ற தாம் இன்புறுதற்குக் காரணமான மரக்கலத்தினது
வருகையினை விரும்பி எதிர்கொள்ளா நின்ற வணிகரைப் போன்று,
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர் கொள் கூடல் - யாம்
விரும்புகின்ற வையையாற்றினது நீரை எதிர்கொள்ளுதற்கு இடமான
மதுரையின்கண்;
(வி-ம்.) தாம் என்றது. முன்னர்க் கூறப்பட்ட மகளிருள்
வைத்து
முகைப்பருவத்து மகளிரை என்க.
தாம் விரும்புங் கணவர் தம்மை எதிர்ப்படும் பொருட்டு
வையைப் புனலை எதிர்கொள்வார் என்க.
பூமேம்பாடு கண்டு தாமே வரும் வண்டுபோலத் தங்கணவர்
தம் மேம்பாடு கண்டு தாமே வந்து எதிர்ப்பட என்க.
தமது மரக்கலத்தின் வருகையை எதிர்கொள்ளும் வணிகர்போல
வையைப்புனலை எதிர்கொள்வார் என்க. தாம் வேண்டும் நாவாய் |
|
|
|