பக்கம் எண் :

பரிபாடல்- வையை165

கரைசேரும் நாவாய், ஏமுறு நாவாய் எனத் தனித்தனி கூட்டுக. நாவாய்
வரவெதிர்கொள்ளும் என்றதனால் வணிகர் என்றாம்.

      இது கூறுவான் பாணன் தலைவனையும் உளப்படுத்தி 'யாம்
வேண்டும் வையைப் புனல்' என்றான். கூடல் - மதுரை.

      ஏமுறு நாவாய் - இன்புறுதற்குக் காரணமான நாவாய் என்க.
ஏமம் - ஏம் என இடைகுறைந்து நின்றது. ஏமம் - இன்பம்.

      (பரிமே.) 38-9. தாம் நினைத்த பட்டணத்தைச் சேர்ந்து
ஏற்றிவிட்ட பண்டங்களைக் கொடுத்து, ஆண்டுள்ளனகொண்டு
இடையூறின்றி வந்து கரையைச்சேரும் நாவாய் என்க.

      சரணத்தராய்த் தாளிட்டுக்கொண்டு ஏறிச்சென்று 'நண்ணி
அலர்வாய விழ்ந்தன்னார் இப் பெற்றி செய்ய முகைப்பருவத்தர் எதிர்
கொள்கின்ற கூடல்' என முடிக்க.

41 - 48: ஆங்க . . . . . . . . . . . சிதைதர

      (இ-ள்.) அணி நிலை மாடத்து அணிநின்ற வயக்கரி - அழகிய
நிலைகளையுடைய மாடத்தின் அணித்தாக நின்றதொரு வலிய
களிற்றியானை, பாங்கு ஆம் மடப்பிடி கண்டு மால் உற்று - தனக்குப்
பக்கத்தே உளதாகிய இளமையுடைய பெண் யானையைக் கண்டு
காமத்தால் மயக்கமுற்று, நடத்த நடவாது நிற்ப - தன்மேலிருந்த பாகன்
செலுத்தவும் செல்லாமல் நிற்ப, மடப்பிடி செல் கரிமேல் மனம் மால்
உறுப்ப - அம் மடப்பமுடைய பிடியானையும்
அக் களிற்றுயானையின்மேற் சென்ற தன் மனம் மயக்கம் செய்யாநிற்ப,
அன்னம் அனையாரோடு நடை ஆயா சென்று - தன்மேலிருந்த
அன்னப்பறவையை ஒத்த மகளிரோடே தனது நடை சுருங்கி அக் கரி
நின்ற இடத்திற் சென்று, எழில்மாடத்துக் கைபுனை கிளர் வேங்கை
காணிய - ஆண்டுள்ள அழகிய புலிமாடத்தின்கண்ணே பண்ணிவைத்த
பாயும் நிலையிலுள்ள வேங்கையினது உருவத்தைக் கண்டவளவிலே, மதி
செத்து - அதனை மெய்யான வேங்கையென்றும் அது தன்
காதற்களிற்றைப் பாயுமென்றும் கருதி, மைபுரை மடப்பிடி - அந்த
முகிலையொத்த பிடியானை, மடநல்லார் விதிர்ப்பு உற - தன்மேலிருந்த
மடப்பமுடைய மகளிர்கள் நடுங்கும்படி, செய்தொழில் கொள்ளாது -
பாகர் செய்யும் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல், சிதைதர - சிதையாநிற்ப;

      (வி-ம்.) ஆங்க: அசை. அணிநிலைமாடம் - அழகிய நிலைகளை
யுடைய மாடமாளிகை. அணிநின்ற - அணித்தாக நின்ற. பாங்கு - பக்கம்
: வயக்கரி பாங்காம் மடப்பிடி கண்டு மாலுற்று என மாறுக. கரி யானை:
நடைஆயா என மாறுக. ஆய்தல் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த
செய்யா என்னும் வாய்பாட்டெச்சம்; ஆய்ந்து என்க. சுருங்கி என்பது
பொருள். "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்,