பக்கம் எண் :

பரிபாடல்- வையை167

      போன்ம் - போலும், என்பது இடையுகரம் கெட்டு லகரம்
னகரமாய்த் திரிந்து நின்றது.

      நீகானும் என்புழி உம்மை இசைநிறை.

      (பரிமே.) 54 - 55.
கலங்களை ஓட்டும் திசையறிந்த நீகான் என்க.

      வையை நீர்விழவின்கண் மைந்தரும் மகளிருமே யன்றி
விலங்குகளும் ஒத்த அன்பினவாயின. அது நின்மாட்டு இல்லையாயிற்று
என்பது கூறியவாறாயிற்று.

      (வையை நீர்விழவின்கண் நிகழ்ந்த இந் நிகழ்ச்சியைத்
தலைவனுக்குக் கூறுகின்ற பாணன் இங்ஙனம் விலங்குகளும் ஒத்த
அன்புடையவாய் ஒன்றை ஒன்று தழுவா நிற்பவும். நீயோ தலைவியை
நினைத்தாயில்லை எனக் குறிப்பாற் கடிந்தவாறாயிற்று என்பதாம்.)

56 - 62: பருக்கோட்டி யாழ்...............................நிகழ்ச்சியும் போன்ம்

      (இ - ள்.) பருக்கோட்டு யாழ்ப்பக்கம் பாடலோடு ஆடல்-பரிய
தண்டையுடைய யாழ்க்கூறும் மிடற்றுப் பாடலும் ஆடலும் ஆகிய இவை,
அருப்பம் அழிப்ப - தம் மனத்திண்மையை அழித்து விட்டமையானே,
அழிந்த மனக்கோட்டையர் - அழிந்தொழிந்த நெஞ்சமாகிய
அரணத்தையுடைய மைந்தரும் மகளிரும், (ஒன்றோரிரண்டா முன்றேறார்?)
வென்றியின் - ஊடலின்கண் வெல்லுதல் காரணமாக, நாணி - தாம்
ஒருவரின் ஒருவர் முற்படுதலை நாணிக்கூடாமல் பதைபதைத்து -
உளந்துடித்து வருந்திநிற்றல், மன்னவர் தண்டம் இரண்டும் -
தம்முட் பகைத்தெழுந்த மன்னவருடைய படைகளிரண்டும், தலைஇ தூக்கி
நின்றவை - தம்முள் தலைப்பட்டுப் போர்செய்து நொந்து நின்றன,
ஒன்றியும் - அப் போரினை ஒழித்துத் தம்முள் உடம்பாடு பெற்றுப்
போதற்கு மனத்தாலே இயைந்து வைத்தும், பல்சன உடம்பாடு ஒலி
எழுதற்கு அஞ்சி - உலகிலுள்ள பலவேறு மாந்தரிடையேயும் இம்
மன்னன்படை முற்பட உடம்பட்டதென்னும் பழிச்சொல் பிறத்தற்கு
அஞ்சிப் பின்னும், நின்ற - போர்செய்தற் றுன்பத்தோடு நின்ற,
நிகழ்ச்சியும் போன்ம் - செயலை ஒக்கும்;

      (வி - ம்,) யாழ் முதலியவற்றின் இன்னிசையாலே மனத்திண்மை
யழிந்து ஊடலழிந்து கூடுதற்கு மனமியைந்தும் ஊடலில் வெல்லுதல்
காரணமாகத் தம்முட் கூடாதுநின்ற மகளிரும் மைந்தரும் உளம்பதைத்து
நிற்கின்ற செயல். போர் செய்த பகைமன்னர் படை தம்முள் உடம்
பட்டுப்போக மனமியைந்தும் பழிச்சொல்லையஞ்சி மீண்டும்
பொருதுதுன்புற்று நிற்கும் செயலை ஒக்கும் என்க.

      பருக்கோடு - பரிய (யாழ்த்) தண்டு. பாடல் - மிடற்றுப்பாடல்.
ஆடல் - கூத்து. அருப்பம் - திண்மை. மனக்கோட்டை - மனமாகிய