ஊக்கத்தால் பரப்புதலாவது தாம்
கள்ளுண்டிருத்தலைப் பிறர்
அறியாமைப்பொருட்டுத் தாம் மேற்கொள்ளும் செயலே அதனைப்
பிறர்க்குப் புலப்படுத்தும்படி முயலுதல்.
கனைந்து - மிகுந்து. மன்னுமஞ்சி - மிகவும் அஞ்சி.
காத்தாங்கு
என்புழி, ஆங்கு: அசைநிலை. உளை - துன்பம். களிமதர் -
கள்ளுண்டதனால் உண்டான களிப்பு. மதரும் என்புழி, உம்மை
இசைநிறை.
(பரிமே.) 69. (கரப்பார் களிமதரும் போன்ம்.)
அக் களிமதரை
மறைப்பாருடைய நிலைமையைப் போலும்.
69 - 78: கள்ளொடு..............................மடுப்ப
இ - ள்.) கள்ளொடு காமம் கலந்து கரைவாங்கும் வெள்ளம்
-
இவ் வாற்றால் கள்ளையும் காமத்தையும் பொருந்துதலால் எல்லையற்ற
இன்பவெள்ளத்தைத் தாராநின்றது, இப்புனல் - நமது வையையிற்
பெருகிய இப் புதுப்புனல், எறி மகர வலயம் அணிதிகழ் நுதலியர் -
ஆளை எறிந்துகொல்லும் இயல்புடைய மகரமீனின் வடிவுடைத்தாய்ச்
செய்த மகரவலயம் என்னும் தலைக்கோலத்தால் அழகு மேலும்
விளங்கும் நெற்றியையுடைய மகளிர், புனல் பொருது மெலிந்தார் திமில்
விட - இத்தகைய புதுநீரிலே விளையாடி இளைத்தாராகப் பின்னர்த் தம்
புணைகளைக் கைவிட்டுக் கரையேறிய அளவில், கனல் பொருத அகிலின
் ஆவி கா எழ-தம்மால் மூட்டப்பட்ட தீயானே சுடப்பட்ட அகிலின்
கண்ணன் றெழுந்த நறுமணப் புகை அக்கரைமருங்கிலுள்ள
பூம்பொழிலெல்லாம் மணக்கும் படி எழாநிற்ப அப்புகையின்கண்
ஈரம்புலர்த்திக்கொண்டு, நகில்முகடு மெழுகிய அளறு மடைதிறந்து திகை
முழுது கமழ - தமது முலைமுகட்டிலே மெழுகப்பட்ட கலவைக்குழம்பு
மடைதிறந்தாற்போன்று நாற்றிசையினும் பரவிக் கமழாநிற்ப, முகில்
அகடுகழி மதியின் - முகிலின் வயிற்றினின்றும் புறப்பட்டுத் தோன்றும்
திங்களை ஒத்து, உறை கழி வள்ளத்து - தம்மால் உறையினின்றும்
வாங்கப்பட்டுத் திகழும் வெள்ளிக் கிண்ணத்திலே, உறு நறவு வாக்குநர்
- வெப்பம் மிக்க தேறலை வார்த்துப் பின்னர், அரவு செறி உவவு மதி
என - பாம்பாலே பற்றப்பட்ட முழுத் திங்கள்போலத் தோன்றும்படி,
அம் கையில் தாங்கி - அக்கிண்ணத்தைத் தம் அழகிய கையிலே ஏந்தி,
மதி உண் அரமகள் என - திங்களினது ஒளியைப் பருகும்
தேவமகளிரைப்போன்று, ஆம்பல் வாய் மடுப்ப - அக் கிண்ணத்தைத்
தமது செவ்வாம்பல் மலரை ஒத்த வாயின்கண் வைத்துப் பருகா நிற்பவும்;
(வி - ம்.) திமில் - புணை. புணையைவிட்டுக் கரையேறி
என்க.
கனல் பொருத - நெருப்புச்சுட்ட. ஆவி - புகை. கா - பூம்பொழில். |
|
|
|