மாலையை வீசுவார்மேல் கொம்புநீரை
வீசுவார் சிலர்; இங்ஙனம்
நீராடலின் வையை போர்க்களத்தை ஒத்தது.
62-73: இளவேனிற்காலத்தே இவ் வையை வானுலகிற்
றிரியும்
வானவூர்திகளைக் காட்டும் தெளிந்த நீரோட்டத்தையுடையது;
அக் காலத்தே நீராடுவோர் பாகோடு கூடிய இளந்தேறலை நுகர்ந்து
இன்னிசை கேட்டுப் பெரிதும் இன்புறாநிற்பர்; அழகாகிய தேறலைக்
கண்ணாலுண்டு களிப்பர்; 'வையையே இங்ஙனம் காரிற் கலங்கி
வேனிலிற் றெளிந்து நின்நிலைமை எப்பொழுதும்
ஒருபடித்தாயிருப்பதில்லை.'
74-87: முன்பனியையுடைய மார்கழித் திங்களில் விரி
நூல்
அந்தணர் திருவாதிரை நாளுக்குரிய சிவபெருமானுக்கு விழாச் செய்யத்
தொடங்கினர்; வேறுசில அந்தணர் பொற்கலம் ஏந்தினர்;
அம்பாவாடலைச் செய்யும் மகளிர் விடியற்காலத்தே நீராடினர்; அம்
மகளிர் குளிர்வாடை வீசுதலானே அந்தணர் வளர்த்த வேள்வித்தீயின்
அருகிற்சென்று தம் ஈர ஆடைகளை உலர்த்தினர்; 'வையையே!
அவ்வேள்வித் தீயிலிட்ட அவி நினக்கு வாய்ப்புடையதாக இருந்தது.
88-92: 'வையையே! காமம் சாலா இளங்கன்னியர்
நின்பால்
தந் தாய்மாரருகில் நின்று தைந்நீராடலாகிய தவத்தைச் செய்தற்குப்
பண்டு எத்தகைய தவம் செய்திருந்தனரோ கூறுக.'
93-100: அங்ஙனம் தைந்நீராடுங்கால் ஒருத்தி தன்
காதில்
நீலமலரைச் சூடி வேறொருத்தியை நோக்கினாள்; அவள் தன் காதில்
அசோகந்தளிரைச் சூடிக்கொண்டாள்; அவ் வசோகந்தளிரின் ஒளி
கதுவுதலானே அந் நீலமலர் இளவெயில் தழுவியது போலாயிற்று;
அப்பொழுது அசோகு சூடியவள் நீலஞ்சூடியவளை நோக்கி இவள்
தன் காதுகளில் நீலமலர்சூடி இப்பொழுது நான்கு விழி படைத்தாள்
என்று கூறி, அவள் உருவம் கொற்றவை போன்று தோன்றும் பொருட்டு
அவளுடைய நெற்றியில் கனல்விழிபோல ஒரு திலகமிட்டாள்.
101-105: பவள வளையணிந்திருந்தாளைக் கண்ட ஒருத்தி,
குவளைத் தண்டினைப் பச்சைவளையலாகத் தன் கையிலணிந்து
கொண்டாள்; செங்கழுநீர்ப் பூவாலே கண்ணி தொடுத்த ஒருத்தியை
மற்றொருத்தி தகைப்பாள் போன்று மல்லிகையோடு நெய்தற்பூவை
விரவித் தொடுத்தாள்.
106-114: வையையின்கண் வாழைத் தண்டைப் பற்றி
நீந்திய
ஒருவன் ஒருத்தியைக் கண்டான்; அவன் நெஞ்சத்தை
|
|
|
|