கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
75 பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப
80 வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் பருமண லருவியின்
ஊதை யூர்தர வுறைசிறை வேதியர்
85 நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த்தர
வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாடல் ஆடன் மழபுலவர் மாறெழுந்து
பொய்யாட லாடும் புணர்ப்பி னவரவர்
90 தீயெரிப் பாலுஞ் செறிதவமுன் பற்றியோ
தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்
நீயுரைத்தி வையை நதி,
ஆயிடை, மாயிதழ் கொண்டோர் மடமாதர் நோக்கினாள்
வேயெழில் வென்று வெறுத்ததோ ணோக்கிச்
95 சாயிழை பிண்டித் தளிர்காதிற் றையினாள்
பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்
குவளை குழைக்காதின் கோலச் செவியின்
இவள்செரீஇ நான்கு விழிபடைத் தாளென்று
நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே
100 கொற்றவைகோ லங்கொண்டோர் பெண்;
பவள வளைசெறித்தாட் கண்டணிந்தாள் பச்சைக்
குவளைப் பசுந்தண்டு கொண்டு;
கல்லகா ரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா வென்பாள்போ னெய்தற் றொடுத்தாளே
105 மல்லிகா மாலை வளாய்;
தண்டு தழுவாத் தாவுநீர் வையையுள்
கண்ட பொழுதிற் கடும்புனல் கைவாங்க
|
|
|
|