வுலகம் பெறும் பொருட்டு, வய
தணிந்து ஏகு - நினது வலி தணிந்து
மெல்லெனச் செல்வாயாக!
(வி-ம்.) ஆம் நாள் - தோன்றும் நாள்; ஆகும் நாள்
என்பது
ஆம் நாள் என நின்றது. அலர்தரு பக்கம் - வளர்பக்கம். நாளின்
நாளின் - நாளுக்குநாள். நளி - செறிவு. சிலம்பு - மலைச்சாரல். பகர
என்னும் செயவெனெச்சத்தைப் பகர்ந்து எனத் திரித்துக் கொள்க. பகர்ந்து
- விளைத்துக்கொடுத்து என்க. பகர்தல் - கொடுத்தல்.
அஃதப்பொருட்டாதல் "பல்வளம் பகர்பூட்டும்" (கலித்தொகை 20-1.)
என்னும் அடிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்த "பல
உணவுகளையும் விளைந்து கொடுத்து" என்னும் நல்லுரையிற் காண்க
பெரும் பக்கம் - வளர்பக்கம். வழியது - பின்பக்கம்; தேய்பக்கம்.
அழிவதின் - அழிவதுபோல. அமரர் நாடோறும் மதியின் கலைகளை
உணவாக உண்கின்றமையாலே மதிதன் நிறைவு அழிவதுபோல என்னும்
பொருள் தந்து அமரர் உண்டி என்பது குறிப்பேதுவாதல் உணர்க.
நீர்வரவு சுருங்க என்க. இருள்உவா என மாறுக. அஃதாவது அமாவாசை.
அன்று திங்கள் முழுதும் தேய்ந்தொழிதல் போல என்க. எண்மதி நிறை
- அட்டமித் திங்களளவு. ஆதலன்றி என வருவித்துக் கூறுக. குறைபடுதல்
நாள் என மாறுக. குறைபடுதலையுடைய நாள். யாரே என்னும் வினா
காணுநர் ஒருவருமில்லை என்பதுபட நின்றது. சேண் - நெடுந்தூரம்.
சேணிகந்து கல்லூர்ந்து வந்த என்பது. தான் வருந்தியும் பிறரை
வாழ்விக்கும் சான்றாண்மையுடையை என்பதற்குக் குறிப்பேதுவாய்
நின்றது மாணிழை என்றது முற்கூறப்பட்ட 'அரிமலர் மீப்போர்வை
ஆரம்" முதலியன. வய - வலி. நீர்க்கு வலிமையாவது மிகுதியே
ஆகலின், ஆசிரியர் பரிமேலழகர் வய என்றதற்கு மிகுதி என்று
பொருள் கூறினர். வய என்பதற்கே மிகுதி என்னும் பொருள்
உளதாயினும் கொள்க.
40. இறுநாள் என்பதே பரிமேலழகர் கொண்ட பாடம்
என்பது
அவருரையானும் குறிப்பானும் உணரலாம். ஈரிடத்தும் இருநாள் என
இருத்தல். திருத்தப்படுதல் வேண்டும். இறுநாள் - வற்றும்நாள்:
இறுநாளும் எனற்பால எச்ச உம்மை தொக்கது தணிந்தேகுதல் இருநாளும்
யாணர்பெற ஏதுவாகாமையான் இருநாளும் என்னும் முற்றும்மை தொக்கது
எனக்கோடல் பொருந்தாமையானும் இறுநாள் என்பதே பாடமாதலைத்
தெளிக.
(பரிமே.) 34. பகர்ந்தென்பது பகரவெனத் திரிந்து
நின்றது.
40. இறுநாளும் என்னும் உம்மை செய்யுள் விகாரத்தால்
தொக்கது.
41 - 49: மாமயில் . . .. . . . . .. . . . அமைந்ததியாறு
(இ-ள்.) (39 வையை) மறையிற்புணா மைந்தர் மாமயில்
அன்னார்
- களவின்கண் புணர்தலையுடைய காதலரையுடைய சிறந்த மயில்போன்ற
மகளிர், காமம் களவிட்டு - காமவின்பச் சிறப்புமிக்க
அக் களவொழுக்கத்தை விட்டு, கைகொள் கற்பு உற்றென - இழிந்த
தன்மையைக் கொண்ட கற்பொழுக்கத்தினை மேற்கொண்டு
அக் கணவனுடைய இல்லிற் சென்று அடங்கிக் |
|
|
|