பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்19

உள்ளீடாகிய இரு நிலத்தூழி என்றார். ஈண்டி - செறிந்து திரண்டு என்க.
நெய்தல் குவளை ஆம்பல் சங்கம் கமலம் வெள்ளம் என்பன.
பேரெண்ணுப் பெயர்கள். இவற்றானும் எண் குறித்துக் கூறப்படாமல்
கடந்த ஊழிகள் என்க. வழிமுறை - பின்னர். கேழல் - பன்றி. கேழற்
கோலமொடு திகழ்வரப் பெயரிய ஊழி என மாறுக. அஃதாவது 'வராக
கற்பம்' என்பது. உணரா - உணரப்படாதன.

      (பரிமே.) 5. வானத்து என்புழி அத்து அல்வழிக்கண் வந்தது.      

      11. முன் அழிகின்ற காலத்தும் வெள்ள மூழ்குதலான், மீண்டும
் வெள்ளம்மூழ்கி என்றார். உள்ளிடப்பட்டதனை 'உள்ளீடு' என்றார்,
ஆகுபெயரால்.

      பரம்பொருளினின்றும் ஆகாயந்தோன்றி அதனினின்றும் காற்றுத்
தோன்றி அதனினின்றும் தீத்தோன்றி, அதனினின்றும் நீர்தோன்றி,
அதனினின்றும் நிலந்தோன்றிற் றென்று வேதத்துள்ளும் கூறப்பட்டது.

20 - 27: நீயே . . . . . . . . . . . . சிறப்பே

      (இ-ள்.) நீயே - அவ்வாறு யாவரானும் உணரப்படாத ஊழிகளைக்
கடந்து முதியனாயிருக்கின்ற நீயே, வளையொடு புரையும் வாலியோற்கு
அவன் இளையன் என்போர்க்கு - நினது பிறப்புமுறை ஒன்றனையே
கருதிச் சங்கின் நிறத்தை ஒக்கும் வெண்ணிறமுடையனாகிய பலதேவனுக்கு
அவன் இளையவன் என்று கூறுவார்க்கு அம்முறை பற்றி, இளையை
ஆதலும் - க இளையையே ஆகியிருத்தலும், புதை இருள் உடுக்கைப்
பொலம்பனைக் கொடியோற்கு - எப்பொருளையும் மறைக்கும் இருள்
போன்ற நிறமுடைய ஆடையை உடைய பொற்பனைக் கொடியுயர்த்திய
அப் பலதேவனுக்கு, முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் - நினது
சிறப்பு முறையே கருதி முதியவன் ஆகுவை என்பார்க்கும் அம் முறை
பற்றி முதியையாகவே இருத்தலும், வடுவில் கொள்கையின் உயர்ந்தோர்
ஆய்ந்த கெடு இல் கேள்வியுள் தேரின் - இங்ஙனமன்றிக் குற்றமற்ற
கொள்கையினை உடைமையானே உயர்ந்தோராகிய ஞானிகள் ஆராய்ந்த
தீமையில்லாத ஞானக்கேள்வியாகிய வேதத்தின் வாயிலாய் நின்னை
அறிந்து தெளியுமிடத்தே, தெரிபொருள் நடு ஆகுதலும் இந்நிலை
இந்நிலை - நீ இளையையும் முதியையுமாதலேயன்றி உயிர்தொறும்
உயிர்தொறும் உள்ளுயிராய் நிற்றலும் ஆகிய இந்நிலைமையும் ஆகிய
ஒன்றனோடொன்று முரணிய இந்நிலைமைகளும், நின்னிலை தோன்றும்
நின் தொல் நிலைச் சிறப்பே - நின்னிடத்தே காணப்படுகின்ற நினது
பழைய நிலைபோல நினக்கே உள்ள சிறப்புக்களேயாம்.

      (வி - ம்.) வாலியோன் - வெண்ணிறமுடைய பலதேவன். பிறர்
கூற்றை அநுவதித்துக் கூறலின், அவன் எனப் படர்க்கைப் பெயராற்