கிடந்தாற்போல, மல்லல் புனல்
வையை - வளமுடைய நீராகிய செல்வப்
பெருக்கினையுடைய வையை மகளே!, நீ மாமலை விட்டு - நீ நினது
பிறந்தையாகிய பெரிய மலையைக் கைவிட்டு, இருத்தல் இல்லத்துத்
தனிச்சேறல் இளிவரல் - நினது கடலாகிய தலைவனது இருத்தற்குரிய
இல்லத்திற்குத் தனியே செல்லுதல் இழிவாகும்; ஆதலால் அங்குச்
செல்லாதே கொள், என - என்று கண்டோர் சொல்லாநிற்ப, கடை அழிய
நீண்டு அகன்ற கண்ணாளை - எல்லையற நீண்டு அகன்ற
கண்ணையுடைய தலைவியை, காளை படையொடும் கொண்டு
பெயர்வானை - தலைவன் உடன் கொண்டு படைக்கலங்களோடு
செல்லாநிற்ப அங்ஙனம் செல்கின்றவனை, சுற்றம் இடைநெறி தாக்குற்றது
ஏய்ப்ப - அத் தலைவியினுடைய சுற்றத்தார் அச்செயலை அறிந்து
அத் தலைவன் செல்லும் இடைச்சுரத்துச் சென்று
அவனோடுபோரிட்டாற்போல, அடல் மதுரை - வெற்றியையுடைய
மதுரைக்கண் உள்ள மாந்தர் நீர் ஆடற்கு அமைந்தது யாறு- இடையே
புகுந்து தடை செய்து நீராடுதற்கு ஏற்றது இவ் வையையாறு;
(வி-ம்.) மறை - களவு: மைந்தரையுடைய மயிலன்னார்
என மாறுக.
காமச் சிறப்புடைய களவு என்க. களவு: ஈறு கெட்டுக் 'கள' என நின்றது.
மயிலன்னார் களவினைவிட்டுக் கற்பொழுக்க மேற்கொண்டு கணவன்
இல்லத்து அடங்கினாற்போல் வையையே நீ கடலிற் றனிச் சென்று
அடங்குதல் இளிவரல் என்க. காமத்தாற் சிறந்தது களவொழுக்கம்,
கற்பொழுக்கம் இழிந்தது என்றதனை 9ஆம் பாடலில்,
"வாய்மொழிப் புலவீர்.. . . .. என்னும் 13 ஆம்
அடி தொடங்கி 26
- கொள்ளாரிக் குன்றுப்பயன்' என்னும் அடியீறாகவுள்ள பகுதியானும்
அதன் உரையானும் உணர்க. கைகொள் கற்பு - சிறுமையையுடைய
கற்பொழுக்கம். கை - சிறுமை. 'இளிவந்த' என்பர் பரிமேலழகர்.
மல்லல் - வளம். மாமலை - பெரிய மலை. இருத்தல்
இல்லம் -
புக்கவில்லம். இதனால் மாமலையாகிய பிறந்தையை விட்டு என உரை
கூறப்பட்டது. பிறந்தை - பிறந்தவில்லம்.
கணவன் உடன்கொண்டு போங்கால் அவனோடு சேறலே
மகளிர்க்குச் சிறப்பாதலன்றி அவன் மனைக்குத் தனியே சேறல்
இளிவரலாம். ஆகலின் நீ தனியே சேறற்க என்றவாறு.
ஆங்கு: அசை. கடை - எல்லை. காளை - தலைவன். ஒரு
தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு இடைச்சுரத்தே சென்றானாக.
அஃதறிந்த தலைவியின் தமர் இடைச்சுரத்தே அவனை மறித்துப் போர்
செய்தாற் போல, மதுரையிலுள்ளோர் வையையின் போக்கை இடையே
தடை செய்து நீராடுதற்கு ஏற்றது வையை என்க. தடை செய்தல் -
அணையிட்டுத் தடுத்தல். |
|
|
|